Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
ஜனவரி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஜாக்பாட் அடிக்கப்போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
January 2026 Monthly Career Horoscope In Tamil: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும்.
அதோடு கிரக நிலைகளின் மாற்றங்களினால் சில சுப மற்றும் ராஜயோகங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களையும், இன்னும் சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது 2026 ஜனவரி மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக பல வெற்றிகள் கிடைக்கும். தனித்துவமான செயல்திறன் உங்களை பணியிடத்தில் தனித்து வெளிக்காட்டும். சிலருக்கு இம்மாதத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் வேலையில் வெற்றிகள் குவியும். வணிகர்கள் தங்கள் துறையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவார்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். நீங்கள் பெறும் வெற்றி தான், உங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து, உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். பணியிடத்தில் உங்களின் தகவமைப்புத் திறன் உங்களை தனித்து நிற்க வைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக கலவையான மாதமாக இருக்கும். கடினமாக உழைத்தால் இம்மாதத்தில் நல்ல பலனைப் பெறலாம். இம்மாதத்தில் தங்களின் வேலையில் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால், முன்னேற்றத்தைக் காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். இம்மாதத்தில் புதிதாக ஏதாவது முயற்சிகளை செய்தால், அதில் நல்ல வெற்றியைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கையில் பெரும் வெற்றியைக் காண்பீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக காத்திருந்தால், இம்மாதத்தில் அது கிடைக்கும். முக்கியமாக இம்மாதத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படுவதால், பணியிடத்தில் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கை நிலையானதாக இருக்கும். தன்னம்பிக்கையும், தவைமைத்துவ திறன்களும் மேம்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய நட்புக்களால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும். சமயோசிதமான சிந்தனையால் பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். பல புதிய வணிக வாய்ப்புகளை காண்பீர்கள். ரிஸ்க்குகளை எடுப்பதன் மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழில் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.பொறுமையாகவும், எதையும் புரிந்து செயல்பட்டால் தான் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் நட்புக்களால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் பணியிடத்தில் புதுமையான விஷயங்களால் உயர் அதிகாரிகளை ஈர்ப்பீர்கள். எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலையில் புதிதாக ஏதாவது செய்து ஒரு அடையாளத்தை உருவாக்குவீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications