Latest Updates
-
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
2025 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
January 2025 Planet Transits: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம். இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதுவும் இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஜனவரி 04 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்குள் நுழைவார். அப்போது சூரியனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அதன் பின் ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கும், ஜனவரி 21 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கும் செல்லவுள்ளார். பின்பு ஜனவரி 24 ஆம் தேதி புதன் மகர ராசியில் நுழைந்து, சூரியனுடன் ஒன்றிணைந்து மீண்டும் புதாத்திய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

மாதத்தின் கடைசியில், அதாவது ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி பல கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் ஜனவரி மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2025 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
2025 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் மகர ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை தொழிலில் ஈடுபடுபவர்கள் இம்மாதம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
மேஷம்
2025 ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறலாம். இதன் மூலம் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
துலாம்
ஜனவரி மாத கிரக பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. வசதிகள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிறைய லாபத்தைப் பெறுவீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் தொடங்கி, வெற்றிகரமாக முடிவடையும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications