Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
2025-ன் முதல் மாதத்தில் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
January 2025 Lucky Zodiac Signs In Tamil: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டின் ஜனவரி மாத கிரக நிலைகளின் படி, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
அதுவும் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி 04 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்கும், ஜனவரி 24 ஆம் தேதி மகர ராசிக்கும், ஜனவரி 27 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்கும், ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கும், ஜனவரி 21 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கும் செல்லவுள்ளனர். இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், சில சமயங்களில் சில கிரக சேர்க்கைகளும் நிகழவுள்ளன. இதன் விளைவாக சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகவும் உள்ளன.

அதோடு இந்த மாதத்தில் சனி கும்ப ராசியிலும், ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் இருப்பார்கள். இப்படியான கிரகங்களின் நிலைகளால் ஜனவரி மாதத்தில் சச ராஜயோகம், லம்பத் யோகம், புதாதித்ய ராஜயோகம், திரிகிரக யோகம் போன்ற யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த கிரக மாற்றங்கள் மற்றும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2025 ஜனவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் சிறப்பானதாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஜனவரி மாதம் சாதகமாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத அளவில் பலவிதமான சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செய்து வந்தால், நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு செழிப்பாக இருக்கும். பலவிதமான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இம்மாதத்தில் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடலாம். இந்த பயணம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் முதல் மாதம் மகிழ்ச்சியானதாக இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், இம்மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்க நேரிடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications