Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
ஜனவரி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
January 2025 Monthly Career Horoscope In Tamil: 2025 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றங்களைக் காணக்கூடும்.
அதோடு கிரக நிலைகளின் மாற்றங்களினால் சில சுப மற்றும் ராஜயோகங்களும் உருவாகின்றன. இதன் விளைவாக சில ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களையும், இன்னும் சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது 2025 ஜனவரி மாத கிரக நிலைகளால் தொழில் ரீதியாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! பணிபுரிபவர்களுக்கு ஜனவரி மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழிலுக்காக நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்கள் உடன் வேலை செய்வோர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதனால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது தொழிலதிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். அலுவலத்தில் உங்களின் நடத்தை உயர் அதிகாரிகளை ஈர்க்கும்வகையில் இருக்கும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் ஜனவரி மாதம் தொழில் ரீதியாக இனிமையாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் கடினமாக உழைத்தால், நல்ல பலனைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக சற்று கவலை நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறமுடியாது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பொறுமையுடன் முயற்சித்தால் ஓரளவு நற்பலனைப் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது சிறப்பாக இருக்கும். இருப்பினும் தொழில் ரீதியாக விரும்பிய வேலையைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இம்மாதத்தில் வெற்றியைப் பெறுவது சற்று குறைவு தான்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவும் உங்களுக்கு மோசமான பலனைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தில் வேலையில் நல்ல பலனைப் பெற காத்திருக்க வேண்டும். எதிர்பார்த்த வெற்றியைப் பெற பொறுமை மிகவும் அவசியம். மேலும் கடினமாக உழைத்தால், நிச்சயம் அதற்கான நல்பலனைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பிரச்சனைகள் தீரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒருவேளை பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கான வாய்ப்புக்கள் இம்மாதத்தில் கிடைக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது தொழிலில் வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் ஒவ்வொரு வேலையையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்கள் பிடித்த வேலையை பெறலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேண வேண்டும். இதனால் உயர் அதிகாரிகளின் உதவியால் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தையும், இலக்குகளையும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
