Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
Horoscope 2026: 2026 ஆம் ஆண்டில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2026: ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்களை அனைவருக்கும் வழங்குகிறது. ஒருவருக்கு பிறக்கும் வருடம் எப்படியிருக்கும் என்பதை அவர்களின் பிறந்த ராசிதான் நிர்ணயிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 2026 ஆம் ஆண்டு கணிப்புகளைப் பொறுத்தவரை சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட மகத்தான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க விதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிர்ஷ்டம் அவர்களின் நிதிநிலை, தொழில் முன்னேற்றங்கள் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். 2026 சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. கிரக நிலைகள் இந்த ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் அற்ப்புதமான மாற்றங்களை அளிக்கிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தனுசு
முன்னேற்றத்தின் கிரகமான வியாழனால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் 2026-ல் பெரிய அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிகளில் முதலிடத்தில் இருக்கிறார்கள், மேலும் 2026- ஆம் ஆண்டு அவர்களின் தலையெழுத்தை மாற்றும் ஆண்டும் ஆண்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் அதிர்ஷ்ட கிரகம் வாய்ப்புகள், சாகசம் மற்றும் செழிப்பை அவர்களுக்கு வழங்க சாதகமாக அமைந்துள்ளது.
தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயங்கள் அல்லது உற்சாகமான பயண வாய்ப்புகள் என எதுவாக இருந்தாலும், தனுசு ராசிக்காரர்கள் 2026-ல் அதிர்ஷ்டப் புயலில் சிக்கப் போகிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே ஆபத்துக்களை விரும்புபவர்கள், மேலும் 2026 அவர்கள் எடுக்கும் ரிஸ்க்கான முயற்சிகள் அவர்களுக்கு தகுந்த வெகுமதியைக் கொடுக்கும்.
மீனம்
கனவுகள் மற்றும் உள்ளுணர்வு இயல்புக்கு பெயர் பெற்ற மீன ராசி, 2026 ஆம் ஆண்டில் மகத்தான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த நீர் ராசியானது கனவுகள் மற்றும் மாயைகளின் கிரகமான நெப்டியூனால் ஆளப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில், மீன ராசிக்காரர்களின் நீண்டகால கனவுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். அது புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி, புதிய வாகனம் வாங்குவதாக இருந்தாலும் சரி அல்லது காதல் திருமணம் செய்வதாக இருந்தாலும் சரி இது அவர்களின் கனவுகள் நிறைவேறப்போகும் ஆண்டாக இருக்கப்போகிறது.
2026 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களின் நிதிநிலை வலுப்பெறும், தொழில் துறையில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள் தேடிவரும் மற்றும் உணர்ச்சிரீதியாக மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைந்திருக்கும். அவர்களின் பச்சாதாப இயல்பு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் மற்றும் உறவுகளிடையே ஒத்துழைப்பும், நல்லிணக்கமும் நிறைந்திருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு, 2026 ஆம் ஆண்டு வெற்றி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது. சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் தலைமைத்துவம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள், மேலும் 2026 அவர்களின் இந்த குணங்களை மேலும் வலுவாக்குகிறது. அவர்களின் தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது நிதிநிலை என எதுவாக இருந்தாலும், சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணிச்சலுக்கு பெயர் பெற்றவர்கள், மேலும் 2026 ஆம் ஆண்டில், அவர்களின் அச்சமற்ற அணுகுமுறை வியாபாரத்தில் முன்னேற்றங்கள் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அளிக்கும். அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் உச்சத்தை அடைய அவர்களுக்குத் தேவையான ஆதரவை கிரகங்கள் வழங்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நீதியின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுகிறார்கள். 2026 ஆம் ஆண்டில் அவர்கள் நிலையான வளர்ச்சியையும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் அடையலாம். மகர ராசிக்காரர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் வரப்போகிற ஆண்டில் பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். 2026 ஆம் ஆண்டு அவர்களின் முயற்சிகளுக்கான உடனடி வெகுமதிகளை அனுபவிக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆண்டு எதிர்பாராத நிதி ஆதாயங்கள், தொழில் முன்னேற்றங்கள் மற்றும் அங்கீகாரம் கிடைப்பதற்கான காலமாக இருக்கும்.
மகர ராசிக்காரர்கள் அவர்களின் விடாமுயற்சி மற்றும் வாழ்க்கையில் அவர்களின் ஒழுக்கமான அணுகுமுறை காரணமாக 2026-ல் வாழ்க்கையில் உச்சத்தை அடையப்போகிறார்கள். நீண்ட கால இலக்குகளை நோக்கி உழைத்து வருபவர்கள், தங்கள் முயற்சிகளின் பலன்களை அடைவார்கள், சிலர் தங்கள் தொழில் அல்லது முதலீடுகளில் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். 2026 ஆம் ஆண்டு அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












