Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்!
உங்க ராசியை சொல்லுங்க.. 2026-ல் நீங்க எந்த விஷயத்தில் கவனமாக இருக்கணும்-ன்னு சொல்றோம்...
Horoscope 2026: பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் நுழைந்துவிட்டோம். ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
இந்த கிரக மாற்றங்களால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும். இந்த புதிய ஆண்டில் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத அதிஷ்டத்தைப் பெறலாம். அதே வேளையில் இன்னும் சில ராசிக்காரர்கள் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

பொதுவாக ஒரு ஆண்டில் நடக்கப்போகும் நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதை விட, அந்த ஆண்டில் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். இப்போது 2026 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் ஆடம்பர செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் 2026 ஆம் ஆண்டில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நிலம், சொத்து மற்றும் தொழிலில் விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் உடன் பிறந்தவர்கள், தாய் மாமன், நண்பர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேலும் வேலை விஷயங்களிலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசியைச் சேர்ந்தவர்கள் 2026-ல் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். அதோடு பண விஷயத்திலும், அப்பா வழி உறவுகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் ஆரோக்கியம், மனம், தனிப்பட்ட உறவு மற்றும் திருமண வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் 2026-ல் தங்கள் வேலை, காதல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தவறான தொடர்புகளால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், இதில் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த துலாம் ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் எதிரிகள், கடன், பணம் மற்றும் தொழில் விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது, தாயின் ஆரோக்கியம் மற்றும் வேலை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் 2026 ஆம் ஆண்டில் வேலை, தாய் மற்றும் தந்தையின் ஆரோக்கியம், வாகனம் மற்றும் சொத்து விஷயங்களில் வழக்கத்தை விட கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் மற்றும் தவறான உறவுகளால் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்பதால், இவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் 2026 ஆம் ஆண்டில் தவறான தொடர்பால் கெட்ட பெயர் வாங்கும் வாய்ப்புள்ளதால், இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியைச் சேர்ந்தவர்கள் 2026 ஆம் ஆண்டில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆண்டில் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications