Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
2026-ல் லட்சுமி தேவியின் சிறப்பு ஆசியைப் பெறப்போவது இந்த 5 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2026: 2025 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 2026 என்னும் புதிய ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டு மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது.
அதுவும் ஜோதிடத்தின் படி பல கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன. அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு செல்வம், பணம், மரியாதை, புகழ், வெற்றி போன்றவை கிடைக்கும். மேலும் சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி கிடைத்து, நிதி நிலைமை சிறப்பாக இருக்கப் போகிறது.

அதோடு நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது. இப்போது 2026 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் சிறப்பான அருளைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். குறிப்பாக லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலைமை மிகவும் வலுவாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் பெரிய செலவுகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அதன் பின் நிதி நிலையில் உடனடி உயர்வு ஏற்படும்.
சிம்மம்
2026 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த ஆண்டில் சூரியனும், குரு பகவானும் சாதகமான நிலையில் இருப்பதால், இந்த ஆண்டில் மகத்தான செல்வத்தைப் பெறுவார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் பணத்தை இழந்திருந்தால், இந்த ஆண்டில் அந்த பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மேலும் இந்த ஆண்டில் லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைப்பதால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் ஆசியால் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு, நிறைய செல்வத்தைப் பெறுவார்கள். சனி மற்றும் குருவின் நிலையால் நிதி நிலை வலுவடையும். பங்குச் சந்தை, வணிகம் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக பணம் சிக்கியிருந்தால், இந்த ஆண்டில் கிடைக்கும். இந்த ஆண்டு செலவுகளை சமநிலையில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். முக்கியமாக இந்த ஆண்டு அவசரமாக எந்த முதலீடுகளையும் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் 2026 ஆம் ஆண்டில் லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் திறக்கப்படும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உறவுகள் வலுவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் இந்த புதிய ஆண்டில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டில் லட்சுமி தேவியின் சிறப்பான அருள் கிடைக்கும். குரு சிறப்பான நிலையில் இருப்பதால், மகத்தான நிதி நன்மைகள் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மகத்தான நன்மைகளைப் பெறுவார்கள். ஆண்டின் நடுப்பகுதியில் திடீரென்று பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் இந்த புதிய ஆண்டின் ஒவ்வொரு மாதமும் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications