Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
2025-ல் இந்த 4 ராசி பெண்களுக்கு சூப்பரா திருமணம் நடக்கும் அதிர்ஷ்டம் இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: அன்பான மற்றும் பொறுப்பான கணவன் கிடைக்க வேண்டுமென்பது அனைத்து பெண்களுக்கும் இருக்கும் வாழ்நாள் கனவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க மனைவிக்கு துணை நிற்கும் கணவன் கிடைத்தாலே போதும். அன்பை மட்டுமல்ல பெண் விரும்பும் சுதந்திரத்தையும், தன் இலட்சியங்களுக்கு ஆதரவையும் தரும் கணவனைப் பெறவே அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.
2025 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் வந்துவிட்டது. 2025-ல் சில ராசிகளில் பிறந்த பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது போல மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்களுக்கு 2025-ல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்னு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி பெண்கள் மற்றவர்களின் அன்பு மற்றும் மரியாதைக்காக ஏங்குபவர்கள். எல்லோரையும் சமமாக நேசிக்கும் திறன் கொண்ட இந்த ராசிக்காரர்கள் அதே அன்பு மற்றும் மரியாதையை தங்கள் வாழ்க்கைத்துணையிடமும் எதிர்பார்க்கிறார்கள்.
2025-ல் இந்த ராசி பெண்களுக்கு அவர்களின் குணத்திற்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற கணவர் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். இந்த ராசி பெண்களுக்கு வரவிருக்கும் ஆண்டில் மனைவியின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவர் கிடைப்பார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே அன்பான பெண்களாக இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் மற்றவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள், அதேசமயம் இந்த ராசி பெண்கள் மற்றவர்களால் மிக விரைவாக காயப்படுவார்கள்.
2025ல் திருமணம் செய்யும் இந்த ராசி பெண்களுக்கு நல்ல கணவர் கிடைக்க வாய்ப்புள்ளது. அன்பும், கருணையும், நல்ல உள்ளமும் நிரம்பியவர்கள் இந்த ராசிக்காரர்களுக்கு கணவராகக் கிடைப்பார்கள். எந்தவொரு கடினமான நேரத்திலும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கணவர் அவர்களைத் தேடிவருவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் காதலில் எப்போதும் நேர்மையாக இருப்பவர்கள். காதலாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, விசுவாசமான நபர்களாக இவர்கள் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு 2025ல் திருமணம் நடந்தால் நல்ல நேர்மையான கணவர்கள் கிடைப்பார்கள்.
கணவரின் ஆதரவுடன், இந்த ராசிக்காரர்கள் விரும்பிய பல விஷயங்களைப் பெற முடியும். மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் கணவரை அவர்கள் பெறுவார்கள். அவர்களின் தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும்.
மீனம்
மீன ராசி பெண்கள் மற்றவர்களை காயப்படுத்த தெரியாதவர்கள். தங்களை சுற்றியிருப்பவர்கள் சோகமாக இருப்பதை அவர்களால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது, அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
இந்த ராசிக்காரர்கள் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் மிகவும் அன்பாக இருப்பார்கள். 2025-ல் திருமணம் செய்யும்போது இவர்கள் அதே குணங்கள் கொண்ட கணவரைப் பெறுவார்கள். சொந்தக் குடும்பத்துக்கு மட்டுமின்றி மனைவி குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கணவரைப் பெறும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

