Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
2025-ல் இந்த 4 ராசிக்காரர்கள் கையிலிருக்கும் மொத்த பணமும் கறையப்போகுதாம்... கடனில் மூழ்கவும் வாய்ப்பிருக்காம்!
Horoscope 2025: புதிய வருடம் பிறக்கும் போது அனைவரும் வரப்போகும் ஆண்டில் தங்கள் ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். வருட பலன்கள் என்று வரும்போது அனைவரும் முதலில் பார்க்கும் விஷயம் தங்களின் நிதி நிலை எப்படி இருக்கும் என்பதுதான். வரப்போகிற வருடம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.
சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தையும், சாதனைகளையும் சந்திக்கும் அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் தடைகளையும், சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே தங்கள் ராசிக்கு காத்திருப்பது என்று தெரிந்து கொள்ள அனைவருமே ஆர்வத்துடன் இருப்பார்கள்.

2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி சில ராசிக்காரர்கள் பணக்கஷ்டத்தை சந்திக்கப் போகிறார்கள். 2024-ம் ஆண்டை ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் நிதிரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறார்கள். இது எதிர்பாராத சிக்கல்கள் அல்லது நிதி இழப்புகளை ஏற்படுத்தலாம். 2025-ல் எந்தெந்த ராசிக்காரர்கள் துரதிஷ்டத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் 2025-ல் எதிர்பாராத நிதி பின்னடைவை சந்திக்கப் போகிறார்கள். இது அவர்களின் சேமிப்பை கூட கரைக்கலாம். .இதுவரை சம்பாதித்த அனைத்தையும் இழக்கப் போகிறோம் என்ற பயம் அவர்களுக்குள் எழலாம்.
எனவே பணத்தை முதலீடு செய்யும் போது அல்லது நிதி முடிவுகளை எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும், இது வாழ்க்கையில் சவால்களுக்கும், துன்பங்களுக்கும் வழிவகுக்கும். வியாபாரிகள் இந்த வருடம் கையிலிருக்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் வரப்போகிற வருடத்தில் நிறைய உணர்ச்சி மற்றும் நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இது அவர்கள் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். வேலையில் ஏற்படும் நெருக்கடி பின்னர் நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்கும் விஷயமாக மாறுகிறது.
இது அவர்கள் வாழ்க்கையில் நிதிரீதியான மந்த நிலையை ஏற்படுத்துகிறது. எனவே அனுபவமில்லாத முதலீடுகளை முடிந்தவரை தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் உங்களின் முதலீடுகள் உங்களை முதுகில் குத்த வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் 2025-ஆம் ஆண்டைக் கடப்பது மிகவும் சவாலான விஷயம். பெரும்பாலும் அவர்களின் வேலை நிலையானதாக இருக்காது, இது அவர்களுக்கு கடினமான ஆண்டைக் கொடுக்கும். இதன் விளைவாக, பலர் வணிகத்தை நோக்கியோ, பணம் சம்பாதிக்க பிற எளிதான வழிகளை நோக்கியோ திரும்புவார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் மேலும் சிக்கலை அதிகரிக்கிறது.
எனவே இதுபோன்ற திட்டங்களைத் தொடங்குவதற்கு முன், அதன் எதிர்கால வாய்ப்புகளைப் புரிந்துகொண்டு முன்னேறுவது அவசியம். தடையில்லா வருமானத்திற்கான வழிகளைக் கண்டறிந்த பிறகு விஷயங்களை நிர்வகிப்பதில் இறங்குங்கள். சரியான திட்டமிடல் இல்லாமல் எதையும் முயற்சிக்காதீர்கள்.
மகரம்
2025-ல் மகர ராசிக்காரர்களுக்குத் தொடர்ச்சியான தடைகள் காத்திருக்கின்றன. பெரும்பாலும் அவர்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் மிகவும் சிக்கலான மாற்றங்கள் ஏற்படலாம். முதலீடு செய்த பணம் நஷ்டத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
முதலீட்டை சரியாக செய்வதிலும், நிதியை கவனமாக கையாள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். விரக்தியின் காரணமாக இந்த வருடம் அவர்களுக்கு மோசமான ஆண்டாக முடிவடையும். எனவே எல்லாவற்றையும் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications