Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
2025-ல் ஜெயிக்கிற குதிரையாக இருக்கப்போறது இந்த 4 ராசிக்காரங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: 2025 ஆம் ஆண்டு கிட்டதட்ட வந்துவிட்டது, 2025-ன் ஜோதிடக் கணிப்புகளும் வந்துவிட்டது. தங்களின் ராசிக்கு வரப்போகிற ஆண்டு எப்படி இருக்குமென்று ஆர்வம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இப்போதே தொடங்கிவிட்டது. ஒட்டுமொத்த 2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி இந்த புது வருடம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாகவும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான ஆண்டாகவும் இருக்கப்போகிறது.
இந்த வருடம் அனைத்து பெரும்பாலான ராசிக்காரர்களுக்கு நேர்மறையான பலன்களை அளித்தாலும் சில ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக அவர்களின் கேரியரில் உச்சத்தை தொடப்போகிறார்கள். 2025-ல் ஜெயிக்கிற குதிரையாக இருக்குப்போகும் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சனிபகவானின் பெயர்ச்சி உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்குவதுடன், உங்களை மிகவும் வசதியாக உணர செய்யலாம் மற்றும் நிதிநிலையை அதிகரிக்கலாம். புத்திசாலித்தனமான தேர்வுகளைச் செய்ய புதன் உங்களுக்கு உதவும்.
நீங்கள் என்ன செய்துள்ளீர்கள், எப்படி திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை தீர ஆலோசிக்கவும், உங்களுக்கு என்ன தேவை மற்றும் நீங்கள் விரும்புவது என்னவென்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். சில நேரங்களில், உங்கள் வாழ்க்கையில் உள்ளவர்கள் உங்களுக்கு புதிய யோசனைகள் அல்லது வெற்றியைக் கொண்டு வர உதவுவார்கள். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் 2025 உங்களுக்கான ஆண்டாக இருக்கும்.
மிதுனம்
2025 ஆண்டின் தொடக்கத்திலேயே புதனின் அனுகிரகத்தால் உங்களின் வாழ்க்கையில் ஏறுமுகத்தில் தொடங்கும். நீங்கள் புதிய வேலை ஒன்றை தேடிக்கொண்டிருந்தால், உங்களின் தேடுதலை நிறைவேற்றும் சிறப்பான வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் மிகப்பெரிய வெற்றியை அடையலாம்.
பிப்ரவரியில் சனியும் புதனும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் வேலையில் இருந்த அழுத்தம் குறைந்து நீங்கள் மிகவும் நேர்மறையாக உணருவீர்கள். வணிகர்களுக்கு, இந்த நேரத்தில் புத்திசாலித்தனமான, லாபகரமான ஒப்பந்தங்களைச் செய்வதற்கு கிரகங்கள் ஒத்துழைக்கும். மொத்தத்தில் 2025 உங்களுக்கு கேரியரில் முக்கியமான ஆண்டாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது வெற்றிக்கான ஆண்டாகும். பிப்ரவரியில் குருபகவான் உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் வாய்ப்புகளை வழங்குவார், இது வேலையில் நிறைய நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். மார்ச் மாதத்தில் சுக்கிரன் சில சிறந்த வாய்ப்புகளை வழங்குவார், இது வணிக ஒப்பந்தங்களுக்கு முக்கியமான நேரமாக அமைகிறது.
ஏப்ரல் மாதத்தில் பணியில் சில புதிய சவால்களை எதிர்பார்க்கலாம், இது வணிகர்களுக்கு சற்று கடினமான காலமாக இருக்கும். ஆனால், புத்திசாலித்தனமான நகர்வுகள் மற்றும் சுக்கிரனின் ஆசீர்வாதத்தால் நீண்ட கால ஆதாயத்தை அடையலாம். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உங்களின் வியாபாரம் ஏறுமுகத்தில் இருக்கும். டிசம்பர் வரை குருபகவானின் ஆசீர்வாதம் உங்களை பாதுகாப்பதால் 2025 உங்கள் கையில் பணம் புரளும் ஆண்ட இருக்கும்.
மகரம்
வெற்றி மற்றும் செல்வத்தின் கிரகமான சுக்கிரன் மகர ராசிக்காரர்களுக்கு ஆசீர்வாதத்தை பொழியப்போகிறார். உங்களின் உற்பத்தித்திறனும் மற்றும் நுண்ணறிவும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே சிறப்பாக இருக்கும். செவ்வாய் உங்களின் வணிக வளர்ச்சியைத் தூண்டுகிறது, அதே நேரத்தில் புதன் உடனடி கவனம் தேவைப்படும் முக்கியமான பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறது.
அலுவலகத்தில் நம்பிக்கையையும், நேர்மறையான அணுகுமுறையையும் பராமரிப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வடக்கு முனையின் சிக்கலான தாக்கம் எதிர்பாராத சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், எனவே பெரிய படத்தை கவனமாக பரிசீலிக்க வேண்டியது அவசியம். சுக்கிரனின் ஆசீர்வாதம், வியாழனின் அதிர்ஷ்டம் மற்றும் புதனின் வழிகாட்டுதல் ஆகியவை இந்த வருடம் முழுவதும் உங்கள் வெற்றிக்கு துணை நிற்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications