Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
லால் கிதாப் படி, 2025-ல் இந்த 5 ராசிக்காரர்கள் தான் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டு தொடங்கவுள்ளது. இதனால் நிறைய பேருக்கு வருகிற 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் இருக்கும். இதை தெரிந்து கொள்ள மக்கள் ஜோதிடத்தைப் பார்ப்பார்கள்.
ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது கணித்து கூறப்படுகிறது. அதேப் போல் வட மாநிலங்களில் உள்ள மக்களின் ஜோதிடம் சார்ந்த நம்பிக்கைகளுள் ஒன்றாக லால் கிதாப் என்னும் சிவப்பு நிற புத்தம் இருந்து வருகிறது.

இந்த புத்தகம் ஒருவரது ராசியைக் கொண்டு, அவர் எந்த மாதிரியான பரிகாரத்தை செய்தால், வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்பது குறித்து கூறுகிறது. இந்த லால் கிதாப்பின் படி, வருகிற 2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரப்போகிறது. நீண்ட நாள் ஆசைகள் இந்த ஆண்டில் நிறைவேறவுள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் போன்றவை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். லால் கிதாப்பின் படி, 2025-ல் சிறப்பான பலன்களைப் பெற மேஷ ராசிக்காரர்கள் வெள்ளி நாணயத்தை உடன் வைத்திருப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. நீண்ட நாள் பிரச்சனைகள் இந்த ஆண்டில் முடிவுக்கு வரும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். 2025-ல் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்க, இந்த ராசிக்காரர்கள் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
சிம்மம்
லால் கிதாப் படி, 2025 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இந்த ஆண்டில் வெற்றிகராமக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 2025-ல் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற நெற்றியில் மஞ்சள் அல்லது குங்குமத்தை தடவுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் வாழ்க்கையில் பலவித நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கும்பம்
லால் கிதாப்பின் படி, கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அமோகமாக இருக்கும். வாழ்க்கையில் நடக்கும் பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நன்றாக இருக்கும். புதிய வீடு அல்லது சொத்து வாங்கும் கனவு நனவாகும். பயணங்களால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் தொடர்பு கொள்ளும் திறன் சிறப்பாக இருக்கும். இது தொழிலில் நிறைய நன்மைகளை அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications