Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்த 5 நட்சத்திரக்காரர்கள் 2025-ல் சகல நன்மைகளையும் பெற்று ராஜவாழ்க்கை வாழப்போறாங்களாம்...!
Horoscope 2025: ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அது ஒவ்வொரு ராசிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்துவமான நட்சத்திரத்திற்கும் பலன்களைத் தருகிறது. ஒவ்வொரு ராசியினரும் வரப்போகிற வருடம் தங்களுக்கு சிறப்பான வருடமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதேபோல ஒவ்வொரு நட்சத்திரமும் நிதிரீதியாக பல நன்மைகளை பெற விரும்புகிறது.
2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி சில நட்சத்திரக்காரர்கள் வரப்போகிற ஆண்டில் சிறப்பான அதிர்ஷ்டத்தைப் பெறப்போகிறார்கள். 2025 ஆம் ஆண்டில் எதிர்காலம் பிரகாசமாக இருக்கப்போகும் சில நட்சத்திரங்கள் உள்ளன. அவர்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள் மற்றும் அனைத்து வித நன்மைகளையும் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரோகிணி
2025ம் ஆண்டு ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் பிரகாசிக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். அவர்கள் தங்கள் நிதிநிலையை உறுதி செய்ய முடியும் மற்றும் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ முடியும்.
வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். காதலில் இருபவர்களுக்கு அவர்களையே திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு அதற்கான சாதகமான சூழல் நிலவும். அவர்களின் கனவு வாகனத்தை வாங்குவதற்கு நேரம் அமையும்.
கிருத்திகை
இந்த நட்சத்திரங்கள் 2025-ல் அனைத்து கஷ்டங்களையும் சமாளித்து சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க முடியும். குழந்தைகளை வெளிநாடு அனுப்புவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவால் அலுவலகத்தில் பிரகாசிக்க முடியும்.
புதிய திட்டங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகும். பொருளாதாரரீதியாக லாபத்தை அளிக்கும் தொழில்கள் தொடங்கப்படலாம். புதிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும், இது நிதிரீதியாக லாபத்தை அளிக்கும். நிதிநிலை அதிகரிப்பதால் வாழ்க்கைத் தரம் மேம்படும். ஆடம்பரமான பொருட்களால் அவர்கள் வீட்டை நிரப்பலாம்.
கேட்டை
2025-ல் ஆடம்பரமான வாழ்க்கையைப் பெறும் அதிர்ஷ்டசாலிகளாக கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள். புதிய வியாபாரம் தொடங்குபவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். ஏற்கனவே வியாபாரத்தில் உள்ளவர்கள் வளர்ச்சிக்கான வழிகளைப் பெறலாம்.
வேலையில் இருப்பவர்களுக்கு அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு உரிய மரியாதையை பெற்றுத்தரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கலாம். அவர்களின் பள்ளியில் பிரபலமானவராக மாற வாய்ப்புள்ளது.
மூலம்
மூல நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி, வெற்றி மற்றும் செழிப்பைக் கொண்டுவரும். இந்த வருடம் அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். கிரக மாற்றங்கள் அவர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.
சாதகமான கிரக நிலைகள் மாணவர்களை ஆசீர்வதிக்கும், அதன் விளைவாக, கல்வியில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியிடத்தில் முக்கியமான பதவியைப் பெறுவதில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு மறக்க முடியாத வெற்றியைக் கொடுக்கும்.
உத்திராடம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2025 அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில், நட்சத்திரங்களின் மங்களகரமான சேர்க்கைகைள் அவர்களுக்கு சிறந்த நன்மைகளை அளிக்கும். நிலுவையில் உள்ள அவர்களின் வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடிப்பதில் உங்கள் நட்சத்திரங்கள் உறுதுணையாக இருக்கும்.
திருமணமான தம்பதிகளின் நெருக்கம் வலுவடையும், அவர்களின் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையும் வலுவடைவதால் சகல நன்மைகளையும் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












