Latest Updates
-
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்!
இந்த 4 ராசிக்காரங்க 2025-ல் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்... எல்லா நன்மையும் இவர்கள தேடிவரப்போகுது...!
Horoscope 2025: 2025 ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் வரவிருக்கிறது. இந்த புது வருடத்தில் சனி, வியாழன் செவ்வாய் போன்ற முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன, இந்த கிரகங்களின் நிலைகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவரும். தொழில், காதல் உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை சந்திப்பார்கள்.
2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி, சில ராசிகள் 2025-ல் முக்கிய கிரக பெயர்ச்சிகளின் விளைவாக அசாதாரண அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். இந்த கிரக மாற்றங்கள் தனிப்பட்ட உறவுகள், நிதி ஆதாயம் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். வரப்போகிற ஆண்டில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
2025 ஆம் ஆண்டில், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். இந்த ஆண்டு அவர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும், ஏனெனில் அவர்கள் ராசியை ஆளும் கிரகமான செவ்வாய் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் வகையில் அவர்களின் முக்கியமான இலட்சியத்தை அடையும் வகையில் ஆசீர்வதிக்கப்போகிறார்.
இந்த ஆண்டு அவர்களின் சுயமரியாதை உயரும், மேலும் அவர்களின் தனிப்பட்ட தொடர்புகளும் வளரும். மேஷ ராசிக்காரர்கள் புதிய காதல் உறவில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
ரிஷபம்
2025 ஆம் ஆண்டில், தெய்வங்களின் ஆசியால் ரிஷப ராசிக்காரர்கள் நிதிரீதியாக வளமான மற்றும் நிலையான ஆண்டை எதிர்பார்க்கலாம். அவர்களின் நிதிநிலை வியாழன், செவ்வாய் மற்றும் சனிபகவானால் பாதிக்கப்படும், எனவே நீண்ட கால முதலீடுகள் லாபத்தை அளிப்பதையும், எதிர்பாராத நிதி வெகுமதிகளை அனுபவிப்பதையும் அவர்கள் காணலாம்.
அவர்களின் ஆளுமை மற்றும் தெய்வத்தின் ஆசி காரணமாக, அவர்களின் தனிப்பட்ட தொடர்புகளில் நல்லிணக்கம் உருவாகும் அதே வேளையில் அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். செவ்வாயின் ஆசீர்வாதத்தால் அவர்களின் ஆசைகள் நிறைவேறும்.
சிம்மம்
2025 ஆம் ஆண்டில், சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் உள்ளார்ந்த வசீகரத்தின் காரணமாக அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலட்சியங்களில் வெற்றி பெறுவார்கள். வியாழன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் ஆசீர்வாதத்தால் அவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தேடிவரும்.
அலுவலகத்தில் அவர்களின் திறமையும், செயல்திறனும் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது, மேலும் அர்த்தமுள்ள உறவுகள் மற்றும் புதிய கூட்டணிகளை உருவாக்க வாய்ப்புகள் உருவாகும்.
தனுசு
2025 ஆம் ஆண்டில் குருபகவானின் ஆசீர்வாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு உதவும், பொதுவாகவே அவர்கள் சாகச மற்றும் நம்பிக்கைக்கு பெயர் பெற்றவர்கள். சுயமுன்னேற்றம் மற்றும் மேம்பட்ட உறவுகளுக்கான வாய்ப்புகளுடன், இந்த ஆண்டு தொழில் மற்றும் தனிப்பட்ட நிறைவுக்கான நேரமாகும். குருபகவானின் ஆசீர்வாதத்தால் தொழில் வளர்ச்சியடையும் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும், வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது புதிய விஷயங்களை முயற்சிக்கவும், வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிப்பது அவர்களுக்கு நற்பலன்களை அளிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

