Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது?
2025-ல் செவ்வாய் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப் போறாரு.. உங்க ராசியும் இதுல இருக்கா பாருங்க..
Horoscope 2025: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம். இந்த புத்தாண்டு ஜோதிடம் மற்றும் புத்தாண்டின் படி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அவ்வாறான மாற்றங்களால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு, கேது போன்ற பெரிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்த கிரகங்கள் அனைத்தும் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கும் கிரகங்களாகும். மேலும் இந்த 2025 ஆம் ஆண்டை செவ்வாய் ஆட்சி செய்யவுள்ளார். ஏனெனில் எண் கணிதத்தின் படி 2025 ஆம் ஆண்டிற்கான எண் 9 ஆகும். இந்த எண்ணின் அதிபதி செவ்வாய்.

ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, தைரியம், நம்பிக்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறார். இப்படிப்பட்ட செவ்வாய் 2025 ஆம் ஆண்டை ஆட்சி செய்யவுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.
குறிப்பாக நிதி நிலை, தொழில் வாழ்க்கை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது 2025 ஆம் ஆண்டில் செவ்வாயின் ஆசியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். இந்த ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான விஷயங்களில் சிறப்பான முடிவை எடுத்து நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அற்புதமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் கடக ராசியில் இருப்பதால், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ஆண்டில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். சொத்து மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பலனைப் பெறுவீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்ததாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களின் பலவீனங்களை அறிந்து அவற்றை வெல்வீர்கள். இந்த ஆண்டில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நிம்மதியைத் தரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையில் வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களின் இலக்குகளை இந்த ஆண்டில் அடைவீர்கள். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வுடன் பதவி உயர்வையும் பெறுவார்கள். மேலும் இந்த ஆண்டில் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தொழிலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வளர்ச்சியைக் காண்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். சிறப்பான தகவல் தொடர்பு திறனால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நிறைய லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications