Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
உங்க ராசி என்னனு சொல்லுங்க..2025-ல் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கும்னு சொல்றோம்..5 ராசிகளுக்கு ஆபத்து இருக்கு!
Horoscope 2025: ஜோதிட சாஸ்திரம் பல நூற்றாண்டுகளாக தங்களின் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஒருவர் வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வம் என்றால் அது அவர்களின் ஆரோக்கியம்தான். ஏனெனில் ஆரோக்கியமாக வாழும் ஒருவர் தங்கள் வாழ்க்கையில் பிற செல்வங்களை எளிதில் அடைந்து விடலாம்.
ஒருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் மருத்துவ அறிவியல் முக்கியமானதாக இருந்தாலும், ஜோதிடம் ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிகாட்டியாக செயல்படும். வரப்போகிற புதிய ஆண்டில் உங்கள் ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் 2025-ல் பெரிய கவலைகள் ஏதுமின்றி சிறப்பான ஆரோக்கியத்தை அனுபவிப்பார்கள். ஆண்டின் முதல் பாதி சிறப்பாக இருக்கும், ஆனால் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கேதுவின் சாதகமற்ற நிலை வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் ஆரோக்கியத்தில் கலவையான பலன்களே இருக்கும். அவர்கள் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் சில உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அவர்கள் சில மார்பு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பெற்றோரின் உடல்நலத்தில் ஏற்படும் சிக்கலால் கவலையடைவார்கள். இருப்பினும், ஆண்டின் பிற்பகுதியில் ஆரோக்கியம் சுமூகமாக இருக்கும்.
மிதுனம்
கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் இந்த காற்று ராசிக்காரர்கள் ஆண்டின் பிற்பகுதியில் குடல் மற்றும் அமிலத்தன்மை தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள். பொறுமையாக இருப்பதும் மற்றும் அவர்களின் இலக்குகளில் மூழ்கி விடாமல் இருப்பதும் ஆண்டு முழுவதும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் 2025-ல் வருடத்தின் பெரும்பகுதி முழுவதும் சிறந்த ஆரோக்கியத்தை அனுபவிப்பார்கள், ஒவ்வாமை போன்ற சில சிறிய பிரச்சனைகளைத் தவிர, பெரும்பாலான ஆரோக்கிய பிரச்சினைகளை எளிதில் தவிர்க்கலாம். அவர்கள் ஒரு திருப்தியான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்துவார்கள் மற்றும் அவர்களுக்கு பெரிதும் உதவும் நல்ல பழக்கங்களைத் தீவிரமாகத் தேர்ந்தெடுப்பார்கள்.
சிம்மம்
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிம்ம ராசிக்காரர்களின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பார்கள் ஆனால் நவம்பரில் ஆரோக்கியம் மேம்படும். அவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், பருவகால ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவர்களிடம் வழக்கமாக சோதனைகள் மேற்கொள்வது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் 2025-ல் அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சோர்வு, முதுகுவலி மற்றும் மோசமான செரிமானம் போன்ற உணர்வுகளை எதிர்கொள்வார்கள். ஆண்டின் நடுப்பகுதியில் அவர்களின் உடல்நிலை மேம்படும் ஆனால் அதற்காக அவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது.
துலாம்
2025 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், ஆனால் அவர்கள் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தங்கள் தனிப்பட்ட உறவுகளில் சில சிக்கல்களைக் காண்பார்கள், இதனால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் வாழ்க்கையைப் புதிய அணுகுமுறையுடனும், வீரியத்துடனும் எதிர்கொள்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் 2025 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகளில் விருச்சிக ராசிக்காரரும் ஒருவர். இந்த ஆண்டில் அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற நேர்மறையான அணுகுமுறையையும் வீரியத்தையும் கொண்டிருப்பார்கள். அவர்களின் சிறிய சுவாச அமைப்பு தொடர்பான சில பிரச்சனைகளைத் தவிர அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு சில சிறு பிரச்சனைகள் தவிர, ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். அவர்கள் தங்கள் தாயின் உடல்நிலையைப் பற்றி அதிக கவலைப்படுவார்கள், ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் அவை சரியாகும். சரியான நேரத்தில் மற்றும் வழக்கமான சோதனைகள் நிலைமையை சிக்கல் இல்லாமல் மாற்றும் மற்றும் அதிக துன்பத்தை ஏற்படுத்தாது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ராசிக்காரர்கள் 2025-ல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள், ஆனால் அவர்கள் ஏதேனும் ஆரோக்கியப் பிரச்சினையின் அறிகுறிகளை உணர்ந்தால் அதை உடனடியாக மருத்துவரிடம் சோதிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் ஏற்படும் எந்த நாட்பட்ட நோய்களையும் தடுக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு பெரிய ஆரோக்கிய பிரச்சினைகள் எதையும் அனுபவிக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் பருவகால காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி, நல்ல உணவு மற்றும் அதிக தூக்கம் ஆகியவை அவர்களை விரைவாக மீட்க உதவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியம் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். அவர்களின் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பதால் மனஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
