Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பிறவியில் இருந்தே அனுமனின் அருளைப் பெற்ற ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Hanuman Jayanti 2024: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திர நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் அஞ்சனை மைந்தன் அனுமன் பிறந்தார். இந்த ஆண்டின் அனுமன் ஜெயந்தி டிசம்பர் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
புராணங்களில், அனுமன் வலிமை, துணிச்சல் மற்றும் பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறார். அனுமனின் ஆசி இருந்தால், எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். இந்த அனுமன் ஒரே ஒரு அழைப்பின் மூலம் தனது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவராக நம்பப்படுகிறது.

என்ன தான் அனைவருமே அனுமனை வழிபட்டு வந்தாலும், சில ராசிக்காரர்கள் அனுமன் மீது ஆழ்ந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள். அதேப் போல் அந்த ராசிக்காரர்களுக்கு பிறவியில் இருந்தே அனுமனின் அருளும் இருக்கும். இப்போது அப்படி அனுமன் மீது அதிக நம்பிக்கையையும், பக்தியையும் கொண்ட மற்றும் அனுமனுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அனுமனின் தீவிர பக்தர்களாக இருப்பர். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இந்த அனைத்து அம்சமும் அனுமனிடம் இருப்பதோடு, இந்த ராசிக்காரர்களின் உணர்ச்சி மற்றும் தைரியமான நடத்தை அனுமனைப் போன்றே இருக்கும். இதனாலோ என்னவோ அனுமனுக்கு இந்த ராசிக்காரர்கள் மீது தனிப்பிரியம் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் அனுமனின் மிகவும் விருப்பமான ராசிக்காரர்களாவர். சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் அனுமனை வழிபடுவதன் மூலம், அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவதோடு, செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் அனுமனின் பரிபூர்ண ஆசி கிடைத்து வெற்றி பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய் ஆவார். இந்த விருச்சிக ராசிக்காரர்களையும் அனுமனுக்கு பிடிக்கும். அனுமனின் ஆசியைக் கொண்டிருப்பதால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சவால்களையும் எளிதில் வெல்வார்கள். இந்த ராசிக்காரர்களும் தங்களை அறியாமலேயே அனுமன் மீது ஆழ்ந்த நம்பிக்கையைக் கொண்டிருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களும் அனுமன் மீது பிறவியில் இருந்தே ஆழ்ந்த பக்தியைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசியின் அதிபதி குருபகவான். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பார்கள். இவர்கள் அனுமனை மனமுருக வேண்டினால், அவரது ஆசியால் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் மாயமாய் மறையும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பாளிகள். இவர்களும் அனுமன் மீது உண்மையான பக்தியைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசியின் அதிபதி சனி பகவான். அனுமனும், சனியும் நண்பர்கள் என்பதாலோ என்னவோ, இந்த ராசிக்காரர்கள் அனுமன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டிருப்பார்கள். மேலும் அனுமனின் அருளால் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
