Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
500 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Hans, Malavya, Budhaditya Rajyoga Forms Together After 500 Years: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட யோகங்கள் ஒரே வேளையில் உருவாகி இன்னும் சிறப்பான தாக்கத்தை உண்டாக்கவும் செய்யும்.
ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆரம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அதே வேளையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செழிப்பு, ஆன்மீகம், புகழ் ஆகியவற்றின் காரணியாவார்.

மேலும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் அரசு வேலை, தந்தை, தன்னம்பிக்கை, தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார்.
இந்த கிரகங்களின் நிலைகளால் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்கள் ஒரே வேளையில் நவம்பர் மாதத்தில் உருவாகவுள்ளது. இந்த அரிய நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்வில் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும்.
இதனால் திடீர் செல்வத்தை மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெற வாய்ப்புள்ளது. இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைத் தரப்போகிறது. முக்கியமாக மாளவ்ய ராஜயோகம் தொழில் மற்றும் வணிக ரீதியாக நல்ல பலன்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படும். அதாவது பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் தொழிலதிபவர்கள் நல்ல லாபத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சாதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் இதுவரை வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், அது முடிவுக்கு வந்து, வாழ்க்கை செழிக்கும். ஏனெனில் மாளவ்ய ராஜயோகம் 9 ஆவது வீட்டிலும், ஹன்ஸ் ராஜயோகம் 6 ஆவது வீட்டிலும் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புத்திசாலித்தனம் மற்றும் சாதுர்யத்தால் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்கக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ், மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. தன்னம்பிக்கை இருமடங்கு அதிகரிக்கும். ஆளுமையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரலாம். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அவர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications