Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் பிப்ரவரி முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது...
Guru Vakra Nivarthi 2025: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாகும். இந்த குரு தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் இருப்பார். இந்த குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகம் இருக்கலாம். ஆனால் இந்த குரு பகவான் பிப்ரவரி மாதம் 04 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதியில் பயணிக்கவுள்ளார். குரு வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்கள் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் பலவிதமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது குரு வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் கண்போம்.
ரிஷபம்
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் ரிஷப ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அதிலிருந்து விடுபடலாம். குரு பகவானின் ஆசியல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
சிம்மம்
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை காண்பார்கள். தொழிலில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிந்து வந்தால், முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் நுழையலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் கன்னி ராசிக்காரர்கள் குருபகவானின் பரிபூர்ண ஆசியைப் பெறுவார்கள். இதன் விளைவாக பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications