752 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் உருவாகியுள்ள பல சுப யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது

Guru Pushya Yoga 2024: நவகிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப மற்றும் ராஜயோகங்களையும் உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் அக்டோபர் 24 ஆம் தேதி, அதாவது இன்று மிகவும் சிறப்பான நாள். ஏனெனில் இந்நாளில் பல்வேறு சுப யோகங்கள் ஒன்றாக உருவாகியுள்ளன. இப்படியான நிகழ்வு சுமார் 752 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. அதாவது, இன்று குரு புஷ்ய யோகத்துடன் மகாலட்சுமி யோகம், அமிர்த சித்தி யோகம், பாரிஜாத யோகம், புதாதித்ய யோகம், பர்வத யோகம் போன்று பல மங்களகரமான யோகங்கள் ஒன்றாக உருவாகியுள்ளன.

Guru Pushya Yoga And Many Auspicious Yoga Formed On 24 October 2024 Lucky Zodiac Signs

இந்த சுப யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது இந்த சுப யோகஙகளால் இன்று அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெற்று, இலக்குகுளை அடைவார்கள். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பந்தயம், பங்குச் சந்தையின் மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். லட்சுமி தேவியின் ஆசியால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வேலைகளில் வெற்றி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கம். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலை முடிவுக்கு வரும். மேலும் நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய வீடு, வாகனம், தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion