Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
மிதுன ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: ஜூன் மாதத்தில் இந்த 3 ராசிகளின் வருமானம் அதிகரிக்கப்போகுது...
Guru Asta 2025 Jupiter Combust In Gemini On June 2025: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். அந்த வகையில் குரு பகவான் சமீபத்தில் தான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைந்தார்.
இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். குரு பகவான் புதனின் ராசியில் அடுத்த ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். இந்நிலையில் குரு பகவான் மிதுன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். இந்த அஸ்தமன நிலையில் 27 நாட்கள் இருக்கப் போகிறார். அதாவது குரு பகவான் சூரியனுக்கு அருகில் பயணிக்கவுள்ளார். இக்காலத்தில் சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவும், குரு பகவான் சற்று பலவீனமாகவும் இருப்பார்.

இந்த குரு அஸ்தமனம் ஜூன் 09 ஆம் தேதி நிகழவுள்ளது. குரு அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இப்போது குரு அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். மேலும் நிறைய பணத்தை சேமிக்கவும் முடிவும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பரம்பரை தொழிலை செய்து வந்தால் பெரிய அளவில் லாபத்தைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவுகள் வலுவடையும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும். பணியிடத்தில் மகத்தான வெற்றியைப் பெறக்கூடும். கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
