Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
செப்டம்பரில் உருவாகும் கிரகண யோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயல் அடிக்கப்போகுதாம்...!
இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழப் போகிறது. இது ஜோதிடத்தில் எதிர்மறையான நிகழ்வாக கருதப்படுகிறது. ஆனால் அதற்கு சற்று முன்பு ஏற்படும் கிரகண யோகம் சில ராசிக்காரர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இந்த கிரகண யோகம் கிரகணத்திற்கு ஒரு நாளுக்கு முன்பு நடைபெறுகிறது. செப்டம்பர் 6 ஆம் தேதி உருவாகும் கிரகண யோகம் ராகு, சந்திரன் மற்றும் சனிபகவானால் ஏற்படுகிறது. இது குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பாதிப்புகளை உண்டாக்கப்போகிறது.
சனிபகவான் ஆளும் ராசியில் ராகுவும் சந்திரனும் சனியுடன் இணைவதால் கிரகண யோகம் ஏற்படுகிறது. இது உங்கள் துரதிர்ஷ்டம் மட்டுமின்றி மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த கிரகண யோகம் வாழ்க்கையில் சிரமங்கள், தொழில் தடைகள் மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது ஆரோக்கியரீதியாகவும் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் கிரகண யோகத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, கிரகண யோகம் என்பது பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் நாளாக இருக்கும். அவர்களை அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் பல வகையான கவலைகள் அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியமும் தொடர்ச்சியாக பாதிக்கப்படலாம். பிரச்சினைகளை சமாளிக்க உங்களுக்கு பலரின் உதவிகள் தேவைப்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகண யோகத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படப்போகிறது. நீங்கள் பல மோசமான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். அது மட்டுமின்றி, வேலை தொடர்பான பிரச்சினைகளையும் நீங்கள் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக வாய்ப்புகளை இழப்பீர்கள். மன அழுத்தம் அதிகரித்து வாழ்க்கையில் ஒரு சவாலாக மாறும். நிதி நிலைமை உங்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்குகிறது. அனைத்து விஷயங்ளையும் கவனமாக செய்ய வேண்டும். இல்லையெனில், அது வாழ்க்கையில் அதிக சவால்களை உருவாக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கிரகண யோகத்தால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளப் போகின்றனர். பெரும்பாலும், நிதிரீதியாக அவர்கள் பல நெருக்கடிகளை சந்திக்கப் போகிறார்கள். இதனால் பணத்தைக் கையாளும் போது அவர்கள் பெரும்பாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் பேச்சிலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். இது அதிக சவால்களை உருவாக்கக்கூடும். மேலும் பெரும்பாலான விஷயங்களில் மற்றவர்களிடம் சமரசமாக செல்ல வேண்டியிருக்கும். உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொடர்ந்து பாதிக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கிரகண யோகத்தால் பல்வேறு நிதி சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதைச் சமாளிக்க அவர்கள் நிறைய போராட வேண்டியிருக்கும். அவர்கள் அனைத்து விதங்களிலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பும் கரையும். உங்கள் முதலீடுகள் இப்போது நஷ்டத்தை ஏற்படுத்தலாம். உங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமின்றி, நண்பர்களுடன் நல்ல உறவைப் பேண நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் தொடர்ந்து வரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications