Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Grahan Yog In Aquarius 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். மேலும் சூரியன் ராசியை மாற்றும் போது, தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் பிப்ரவரி 13 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வருகிறார். இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் கும்பத்தில் ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக கிரகண யோகம் உருவாகவுள்ளது.

சூரியன் தன்னம்பிக்கை, அடையாளம் மற்றும் சுய வலிமையைக் குறிக்கிறது. அதே நேரத்தில் ராகு குழப்பம் மற்றும் திடீர் மாற்றங்களுடன் தொடர்புடையது. இந்நிலையில் இந்த கிரகங்களின் சேர்க்கையால் மன குழப்பம், முடிவெடுப்பதில் தாமதம் அல்லது சமூக பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும. அலுவலக அரசியல் அல்லது தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த யோக காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மொத்தத்தில் பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்து எந்த வேலையையும் செய்ய வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் திருமண வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வணிக கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும். குடும்ப சூழல் பிரச்சனைகள் நிறைந்து இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சூரியன் ராகு சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். இக்காலத்தில் எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் முதலீடுகளை செய்யும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
