Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தீபாவளிக்கு முன் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Gajkesari Yog Before Diwali 2024: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ரிஷப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிப்பார்.
இந்த ரிஷப ராசியில் குரு பயணிக்கும் காலத்தில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பல யோகங்கள் உருவாகக்கூடும். இந்நிலையில் கிரகங்களில் மிகவும் குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் பயணிப்பார்.

இந்த சந்திரன் குரு இணையும் போது உருவாகும் யோகம் தான் கஜகேசரி யோகம். இந்த கஜகேசரி யோகம் தீபாவளிக்கு முன் உருவாகவுள்ளது. இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
முக்கியமாக இந்த யோகத்தால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. அதுவும் இந்த யோகமானது அக்டோபர் 17 ஆம் தேதி ரிஷப ராசியில் உருவாகி, அக்டோபர் 19 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இப்போது இந்த கஜகேசரி யோகத்தால் தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, நிறைய பணத்தையும் சேமிக்க முடியும்.
கடனாக கொடுத்த பணமும் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குருவின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் மீண்டும் தொடங்கப்படலாம். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குருவின் அருளால் பொருள் இன்பத்தைப் பெறுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய வாகனம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். இதன் விளைவாக நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் திறக்கும். மேலும் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.
வேலைக்காக வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால் அதற்கான வாய்ப்புக்கள் இக்காலத்தில் கிடைக்கும். போட்டி தேர்வுகளை எழுதியிருந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடனான வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
