Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
ஆடி சிவராத்திரி நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது..
Gajkesari Rajyog On Aadi Shivratri 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது ஒன்றிணைந்து, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் இந்த யோகங்களானது சுப தினங்களில் உருவாகி, இன்னும் சிறப்பான தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில் ஆடி மாதத்தின் சிவராத்திரி ஜூலை 23 ஆம் தேதி வருகிறது. சிவபெருமானுக்குரிய இந்த சிவராத்திரி நாளில், ஒரு மங்களகரமான ராஜயோகம் உருவாகவுள்ளது. அதாவது இந்த நாளில் தேவர்களின் குருவான குரு பகவானும், சந்திரனும் ஒன்றிணைந்து மிகவும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி ஆதாயங்களுடன், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெறவுள்ளனர். இப்போது ஆடி சிவராத்திரி நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகமானது உருவாக போகிறது. இதன் விளைவாக கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது நல்ல பலன்களைத் தரப் போகிறது. அதுவும் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வேலையை தொடங்க நினைத்து முயற்சித்தால், நல்ல பலனைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகமானது அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரலாம். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். இந்த பயணம் எதிர்பாராத நன்மைகளை தரலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பெருமளவில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது 4 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்தைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உறவினர்களுடனான உறவு வலுபெறும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
