Latest Updates
-
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: அக்டோபரில் இந்த 3 ராசிகளின் கனவு நிறைவேறும்..
Gajkesari Rajyog On 12 October 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் சேர்க்கைகள் மற்றும் அவற்றின் நிலைகளால் ஏற்படும் யோகங்களும் சிறப்பான தாக்கத்தை உண்டாக்குகின்றன. அந்த வகையில் கிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான்.
இந்த குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனும் மிதுன ராசிக்குள் அக்டோபர் 12 ஆம் தேதி நுழையவுள்ளார். இதனால் மிதுன ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மிகவும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த யோகங்களுள் ஒன்றாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத அளவில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
அதுவும் 3 ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். மேலும் குருவின் அருளால் நீண்ட நாள் கனவுகளும் நிறைவேறும் வாய்ப்புள்ளது. இப்போது அக்டோபரில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இதன் மூலம் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். அறிவாற்றல் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். திடீரென்று பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். மார்கெட்டிங், ஊடகம், வங்கி போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications