Latest Updates
-
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
கஜகேசரி ராஜயோகத்தால் அக்டோபர் 12 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது!
Gajkesari Rajyog On 12 October 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் தான் சந்திரன். இந்த சந்திரன் கடக ராசியின் அதிபதியாவார். கிரகங்களில் சந்திரன் மனதில் காரணியாவார். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், சந்திரன் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அந்த வகையில் சந்திரன் அக்டோபர் 12 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மிதுன ராசியில் ஏற்கனவே தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் மிதுன ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இதன் விளைவாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணப்பிரச்சனைகள் தீர்ந்து நிதி நிலையில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். நிதி நிலைமை வலுவடையும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தலைமைத்துவ திறன்கள் மேம்படும். முடிவெடுக்கும் ஆற்றலும் அதிகரிக்கும். பணியிடத்தில் மற்றவர்களை சிறப்பாக வழிநடத்துவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இக்காலத்தில் புத்திசாலித்தனமாகவும், விவேகத்துடனும் நடந்து கொண்டால், எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். மொத்தத்தில் இந்த யோகம் செல்வம், வெற்றி போன்றவற்றைக் கொண்டு வரும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் தீர்க்கப்படும். தொழிலில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. பல புதிய யோசனைகள் உருவாகும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு சவாலையும் திறம்பட எதிர்கொள்வீர்கள். மொத்தத்தில் வெற்றியால் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
