Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
ஐப்பசி பௌர்ணமி எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா?
Full Moon on 05 November 2025: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் பௌர்ணமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி இன்னமும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஐப்பசி பௌர்ணமியானது நவம்பர் 05 ஆம் தேதி அன்று வருகிறது. இந்நாளில் சந்திரன் ரிஷப ராசியில் இருப்பார்.
ஜோதிடத்தின் படி, நவம்பர் மாத பௌர்ணமியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது 2025 ஆம் ஆண்டின் ஐப்பசி மாத பௌர்ணமி எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், எந்த ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மன குழப்பம் அதிகமாக இருக்கும். இந்த பௌர்ணமி நாளில் முக்கியமான வேலைகளைச் செய்ய விரும்பலாம் அல்லது முக்கியமான பணிகள் மற்றும் பயணங்களில் பிஸியாக இருக்கலாம். மொத்தத்தில் பரபரப்பாக இருப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியானது சில முக்கியமான பண விஷயங்களை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும், அது சம்பள உயர்வு, புதிய வேலை அல்லது வேறு பதவி உயர்வு போன்றவையாக இருக்கலாம். அதே சமயம் சில பெரிய செலவுகளையும் சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக தனிப்பட்ட மற்றும் நிதி ரீதியாக முக்கிய திருப்புமுனைகள் ஏற்படலாம். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். கூடுதலாக, புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ஐப்பசி மாத பௌர்ணமியால் உணர்ச்சி மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இது உங்கள் வழக்கமான செயல்களில் இருந்து பின்வாங்கி உங்கள் கனவுகளைப் பின்பற்றவும், உங்கள் எண்ணங்களை பகுப்பாய்வு செய்யவும் வழிவகை செய்யும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி ஒரு சிறந்த காலமாக இருக்கும். பல சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை உருவாக்குவதில் நீங்கள் மும்முரமாக இருப்பீர்கள். இருந்தாலும் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிட மறக்காதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியானது கடினமாக உழைப்புக்கான பலனைத் தரும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வேலையில் மும்முரமாக இருக்கலாம. இதனால் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முடியாமல் சண்டை வரலாம். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி புதிய விஷயங்களை முயற்சி செய்ய ஒரு உற்சாகமான கட்டமாக இருக்கும். தற்போதைய வரம்புகளைத் தாண்டி, வேறு விஷயங்களைச் செய்ய நீங்கள் உத்வேகம் பெறலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் வரும் ஐப்பசி மாத பௌர்ணமியானது நீண்ட காலமாக உங்களைத் தடுத்து நிறுத்திய விஷயங்களைச் சமாளிக்க ஏற்ற காலமாக இருக்கும். பட்ஜெட் போட்டு எந்த செலவுகளையும் செய்ய வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு புதிய உறவைத் தொடங்க ஏற்ற காலமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியானது உறவுகள் மற்றும் பிணைப்புகளை ஆழப்படுத்தும். வணிகமாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, தனுசு ராசிக்காரர்கள் அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்கி ஒன்றாக முன்னேற முயற்சிப்பார்கள். அதற்கு சரியான துணையை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வெவ்வேறு பாதைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியானது புதிய பொழுதுபோக்குகளில் மும்முரமாக ஈடுபடுவது, புதிய திறன்களை ஆராய்வது மற்றும் தற்போதைய சுயவிவரத்தை மேம்படுத்துவது பற்றியதாக இருக்கும். எவ்வளவு சலசலப்புகள் இருந்தாலும், நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். ஏனெனில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியால் காதல் கைக்கூடலாம். ஏற்கனவே காதலித்து வந்தால், தங்கள் துணைக்கு மறக்கமுடியாத ஒன்றை வழங்கி ஆச்சரியப்படுத்தலாம். குடும்பத்தை விரிவுபடுத்துவதிலும், அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டிய நேரமாக இது இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஐப்பசி மாத பௌர்ணமியால் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். நெருக்கமானவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நீண்ட காலமாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











