Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது...
Four Planet Transit In November 2024: தற்போது 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் நவம்பர் மாதமானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
அதுவும் இந்த மாதத்தில் தான் வக்ர நிலையில் இருக்கும் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். அதோடு சூரியன், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதில் முதலாவதாக நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார். அதன் பின் நவம்பர் 15 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். பின்னர் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இறுதியாக நவம்பர் 26 ஆம் தேதி புதன் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இப்படி 4 கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளன. இப்போது நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள் மற்றும் இலக்குகளை எளிதில் அடைவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. முதலீடுகளை செய்தால் அல்லது செய்திருந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இம்மாதத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமாவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இம்மாதத்தில் வேலை தொடர்பான முக்கிய முடிவை எடுப்பீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். திருமணமானவர்கள் வாழ்க்கை மகிழ்சசியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications