அக்டோபரில் வரப்போகும் இரண்டு புதன் பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை வெற்றிபடிக்கட்டில் ஏற்றப்போகுதாம்...!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அக்டோபர் மாதம் புதன் பெயர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாதம், புதன் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார். அக்டோபர் 10 ஆம் தேதி காலை 11:09 மணிக்கு துலாம் ராசியில் புதன் சஞ்சரிக்கிறார். அதன்பிறகு அக்டோபர் 29 அன்று இரவு 10:24 மணிக்கு விருச்சிக ராசியில் நுழைகிறார்.

ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கிரகமான புதன் அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கையில் இருந்த பல சிக்கல்கள் முடிவுக்கு வந்து இப்போது அதிர்ஷ்டமான காலம் தொடங்கும். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Double Mercury Transit in October Lucky For These Zodiac Signs

துலாம்

புதன் பெயர்ச்சி துலாம் ராசியிலேயே நடைபெறப் போகிறது. அதன்பிறகு, புதன் இந்த ராசியில் உதயமாகிறார். புதனின் இரண்டு பெயர்ச்சிகளும் துலாம் ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் தொழிலில் எதிர்கொண்டு வந்த அனைத்து பிரச்சனைகளும் இப்போது முடிவுக்கு வரும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களால் பெரும் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த காலக்கட்டத்தில் அவர்கள் செல்வம் அதிகரிக்கிறது மற்றும் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். சிங்கிளாக இருப்பவர்களுக்கு திருமண வரன்கள் கிடைக்கும். அவர்களின் பேச்சாற்றல் அதிகரிப்பதால், இந்த காலகட்டத்தில் அவர்களின் புகழ் அதிகரிக்கும்.

விருச்சிகம்

புதன் பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களின் நிதி வாழ்க்கையில் கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் இந்த காலகட்டத்தில் அவர்களின் வறுமை நீங்கும். சேமிப்பின் காரணமாக அவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். நீங்கள் இதுவரை நீங்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தால், இப்போது அது முடிவுக்கு வரும்.

விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து விதமான வசதிகளையும் அனுபவிப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைந்திருக்கும், மேலும் அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தங்கள் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அவர்களின் திட்டங்கள் சிறந்த பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கூடும் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கு பணிசூழலில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் அவர்கள் பல்வேறு வகையான நிதி ஆதாயங்களை அவர்கள் எதிர்பார்க்கலாம். இந்த மாதம் வியாபாரிகளுக்கு இதுவரை இல்லாத இலாபம் நிறைந்த மாதமாக இருக்கும். வேலையில்இருப்பவர்கள் இந்த மாதம் அலுவலகத்தில் உரிய மரியாதையையும், பாராட்டையும் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் முயற்சிகள் விரும்பிய வெற்றியைத் தரும்.

நீங்கள் கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பின் பலனை இப்போது நீங்கள் பெறலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் வெற்றிப்படிக்கட்டுகளில் வேகமாக ஏற முடியும். நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம் மற்றும் புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிக்கலாம். வேலை தேடும் மகர ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல வேலையை எதிர்பார்க்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 4, 2024, 15:35 [IST]
Desktop Bottom Promotion