Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
100 ஆண்டுகள் கழித்து தீபாவளி நாளில் சனி பகவான் உருவாக்கும் தன ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Diwali 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமல்லாமல், அடிக்கடி மற்ற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது நிலைகளின் மூலமோ சுப அல்லது ராஜயோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இப்படியான யோகங்கள் பண்டிகை நாட்களில் உருவாகும் போது, இன்னும் சிறப்பானது.
அந்த வகையில் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த தீபாவளி நாளில் ஏராளமான யோகங்கள் உருவாகின்றன. அதுவும் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார்.

இந்த ராசியில் பயணிக்கும் போது, சனி பகவான் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது பார்வையின் மூலமோ யோகங்களை உருவாக்குவார். அந்த வகையில் சனி பகவான் இந்த ஆண்டின் தீபாவளியின் போது தன ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
முக்கியமாக 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். குறிப்பாக தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றத்துடன் நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது 2025 தீபாவளியின் போது சனி பகவான் உருவாக்கியுள்ள தன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது நிறைய நன்மைகளை வழங்கும். அதுவும் சனி பகவான் லாப வீட்டில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. செல்வாக்குமிக்க நபரின் ஆதரவு கிடைக்கும். போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பதோடு, சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மேலும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண்பீர்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகத்தால் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நம்பிக்கையுடன் செய்யும் செயல்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவீர்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகத்தால் பண மழை கொட்டும். வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியுடன், நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். தொழிலதிபர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு தன ராஜயோகத்தால் புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். தந்தையுடனான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications