Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
5 ஆண்டுகளுக்கு பின் தந்தேராஸில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: தீபாவளிக்கு முன் குபேரரின் ஆசி பெறும் ராசிகள்!
Diwali 2024: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையானது தென்னிந்தியாவில் ஒரு நாளும், வட இந்தியாவின் சில பகுதகளில் 5 நாட்களும் கொண்டாடப்படுகிறது. அதில் தீபாவளியின் முதல் நாள் தான் தந்தேராஸ் என்னும் "தனதிரயோதசி" நாளாகும். ஜோதிடத்தின் படி இந்த ஆண்டின் தந்தேராஸ் தினமானது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் இந்நாளில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே இந்த ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் விருச்சிக ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த யோகத்தால் லட்சுமி தேவி மற்றும் குபேரரின் ஆசியால் பண மழை கொட்டும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். இப்போது தந்தேராஸ் நாளில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது சிறப்பானதாக இருக்கும். கையில் பணம் அதிகம் புரளும். வியாபாரிகள் குபேரனின் அருளால் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் மற்றும் வீடு வாங்கும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். ஆளுமை மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லட்சுமி தேவி மற்றும் குபேரரின் அருளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறனால் அனைவரது மனதையும் வெல்வீர்கள் மற்றும் உங்களின் புகழ் அதிகரிக்கும். இக்காலத்தில் உங்களை எவராலும் வீழ்த்த முடியாது. எனவே இக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடினமான சூழ்நிலைகளிலும் முன்னேறி செல்வீர்கள். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். எழுத்து தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வெளியூர் பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
