Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Diwali 2024: இந்த தீபாவளி உங்க ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப லக்கி...!
Diwali 2024 Horoscope: இந்தியா முழுவதும் மக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி நெருங்கிவிட்டது. தீபங்களின் திருவிழாவான தீபாவளி வருடத்தின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். புராணங்களின்படி, இந்த நாளில் ராமர், அன்னை சீதை மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு அயோத்திக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.
மற்றொரு புராணம் நரகாசுரன் அழிக்கப்பட்டதை கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. ஜோதிடரீதியாகவும் தீபாவளி மிகவும் முக்கியமான பண்டிகையாக இருக்கிறது. இந்த தீபாவளி நாளில் ஏற்படும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் 12 ராசிகளுக்கும் தீபாவளிப் பண்டிகை எப்படி இருக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த தீபாவளியின் போது மேஷ ராசிக்காரர்கள் ஆற்றலும், உற்சாகமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது உங்கள் மகிழ்ச்சியும், படைப்பாற்றலும் உச்சத்தில் இருக்கும். தீபாவளியன்று, நீங்கள் ஆன்மீக நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கலாம் மற்றும் ஏழைகளுக்கு உதவலாம். உங்கள் உற்சாகம் தீபாவளியை ஒரு துடிப்பான மற்றும் மறக்கமுடியாத அனுபவமாக மாற்றும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஸ்திரத்தன்மை மற்றும் ஆடம்பரத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். தீபாவளியின் போது, சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். இந்த தீபாவளியின் போது, உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மறக்கமுடியாத பரிசுகளை வழங்கலாம். எனவே இந்த தீபாவளி உங்களுக்கும், உங்களுக்கு மகிழ்ச்சியானவர்களுக்கும் சிறப்பானதாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் ஆர்வத்திற்கும், நேசமான இயல்புக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த தீபாவளியில், இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தில் நீங்களே உங்களை மறக்கலாம். வீட்டு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாவளி உணவுகளில் உங்கள் படைப்பாற்றலை முழுமையாகப் பயன்படுத்தலாம். இந்த வருட தீபாவளி விருந்து உங்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் உணர்வுகளின் ஆழத்திற்கும், விசுவாசத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இந்த தீபாவளியில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிட நீங்கள் விரும்பலாம். தீபாவளியின் போது நீங்கள் ஆன்மீகத்தில் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். தீபாவளியன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புவீர்கள். இதனால் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வருட தீபாவளியை மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள். இந்த தீபாவளியை அற்புதமாக மாற்ற, வீட்டு அலங்காரத்தில் சிறப்பு கவனம் செலுத்தலாம். இந்த நேரத்தில் உங்கள் கவனம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் மட்டுமே இருக்கும். நீங்கள் சில சமூக செயல்பாடுகளிலும் பங்கேற்கலாம், இது உங்கள் தொடர்புகளை பலப்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நடைமுறை எதார்த்த அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். இந்த தீபாவளிக்கு நீங்கள் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்ய விரும்புவீர்கள், அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் தொண்டு பணிகளிலும் பங்கேற்கலாம். இது தவிர, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை தயாரிப்பதில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அழகு மற்றும் சமநிலையை விரும்புவார்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை நீங்கள் வீட்டிற்கு அழைக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்ப்பதால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமாக இருப்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்க கவர்ச்சிகரமான மற்றும் கலைநயமிக்க பரிசுகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழம் மற்றும் பேரார்வம் கொண்டவர்கள். இந்த தீபாவளிக்கு ஆன்மீகத்தில் உங்களின் ஆர்வம் கூடும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து ஆழமாக உரையாடுவதை விரும்புவீர்கள். தீபாவளியின் போது, உங்கள் குடும்ப மதிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தைரியமும், சுதந்திர உணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த தீபாவளிக்கு, நீங்கள் புதிய அனுபவங்களைத் தேடலாம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். நீங்கள் ஒரு புதிய பயணத்திற்குச் செல்லவும் முடிவு செய்யலாம், இது தீபாவளியை புதிய இடங்களில் கொண்டாட உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் பொறுப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள். இந்த தீபாவளியில் உங்கள் இலக்குகளை நிறைவேற்ற முயற்சி செய்யலாம். குடும்ப உறவுகளை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். தீபாவளியன்று, நேர்மறையான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலில் உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் புதுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மதிக்கிறார்கள். இந்த தீபாவளிக்கு, உங்கள் வீட்டை முழு கற்பனைத்திறனைப் பயன்படுத்தி அலங்கரிப்பீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். இந்த தீபாவளிக்கு, சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் முயற்சிக்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கனிவானவர்கள் மற்றும் அதிக உணர்திறன் உடையவர்கள். இந்த தீபாவளிக்கு, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், அன்பையும் இரக்கத்தையும் பரப்பவும் முயற்சி செய்யலாம். இந்த தீபாவளியின் போது மற்றவர்களுக்கு பயனளிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. உங்களின் ஆற்றலால் அனைவரும் உங்களிடம் ஈர்க்கப்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
