Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இன்னைக்கு உங்க ராசிப்படி இந்த அதிர்ஷ்ட பொருட்களை வாங்குங்க... வாழ்க்கையில் பண கஷ்டமே வராது...
Dhanteras 2024: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையானது ஒரு நாள் தான் என்றால், வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் தீபாவளி பண்டிகையின் முதல் நாள் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ் என்னும் தன திரயோதசி.
இந்நாள் மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெருக சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதோடு, ஒருசில பொருட்களை வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் தந்தேராஸ் தினம் அக்டோபர் 29 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கினால் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை. ஆனால் அனைவராலும் தங்கம், வெள்ளியை வாங்க முடியாது. அதோடு எந்த ராசிக்காரர்கள் எதை வாங்கலாம், எதை வாங்கக்கூடாது என்ற கேள்வி எழும். எனவே ஒருவரது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும், வாழ்க்கையை செழிப்பாக்கவும் தந்தேராஸ் நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கலாம் என்பது குறித்து இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை வாங்கலாம். ஆனால் இவர்கள் இரும்பு, லெதர் அல்லது கெமிக்கல் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை போன்ற பொருட்களை வாங்குவது நல்லது. கூடுதலாக, இவர்கள் இந்நாளில் குங்குமப்பூ மற்றும் சந்தனம் போன்றவற்றை வாங்குவதும் அதிர்ஷ்டத்தைத் தரும். ஆனால் இவர்கள் எண்ணெய், லெதர் பொருட்கள், மரப்பொருட்கள் மற்றும் வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்வது நல்லது. இத தவிர, நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, ஃபர்னிச்சர்கள் போன்றவற்றையும் வாங்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் பொருட்களை வாங்குவதை விட, குடும்ப உறுப்பினர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு பரிசுகளை வாங்கி கொடுப்பதனால் வாழ்வில் வளர்ச்சியை காண்பதோடு, நல்ல ஆரோக்கியத்தையும் பெறுவார்கள். ஆனால் இவர்கள் தங்கம், ஷேர் மார்கெட்டுகளில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளான இன்று வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பாத்திரங்கள், மரப் பொருட்கள், நிலம், வீடு போன்றவற்றுடன், தங்கம், வெள்ளி போன்றவற்றையும் வாங்குவது நல்லது. ஆனால் இவர்கள் இரும்பு மற்றும் சிமெண்ட் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நிலம், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கேஜெட்டுகள் போன்றவற்றை வாங்குவது நல்லது. ஆனால் இவர்கள் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை வாங்குவதைத் தவிர்ப்பதோடு, வெள்ளை நிற ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் தங்கம், வைரம் போன்றவற்றை வாங்குவதற்கு பதிலாக, குடும்ப உறுப்பினர்களி பெயரில் அத்தியாவசிய பொருட்களில் முதலீடுகளை செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் தங்கம், வெள்ளி, ஆடைகள் போன்றவற்றை வாங்குவது நல்லது. ஆனால் இவர்கள் பெரிய முதலீடுகளை செய்யவோ அல்லது சொத்துக்களை வாங்குவதையோ தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் நிலம், தங்கம், வெள்ளி, வைரம், ரத்தின கற்கள் போன்றவற்றை வாங்கினால், அது இரட்டிப்பாகும் மற்றும் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் நிலம், பாத்திரங்கள், ஆடைகள், தங்கம் போன்றவற்றை வாங்குவது நல்லது. அதோடு இந்நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிகவும் நல்லது. இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் புத்தகங்கள், வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மரச்சாமான்கள், வீட்டு அலங்கார பொருட்கள் போன்றவற்றை வாங்குவது அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஆனால் இவர்கள் சொத்துக்கள், பங்குகள் போன்றவற்றில் முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள் போன்றவற்றை வாங்குவதன் மூலம் அதிர்ஷ்டத்தைப் பெறலாம். ஆனால் பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











