Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
தேவ் தீபாவளியில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இன்று இந்த ராசிகளுக்கு எதிர்பாராத ஜாக்பாட் அடிக்கும்..
Dev Diwali 2025: தேவ் தீபாவளி தேவர்களின் தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து தேவர்களும் பூமியில் உள்ள புனித நதிகளில் வசித்து தீபாவளியைக் கொண்டாடுவதாக நம்பப்படுகிறது. இதனால் தான் கங்கை நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் தேவ் தீபாவளி நாளில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்து 15 ஆவது நாளில் வரும் பௌர்ணமியில் தேவ் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தேவ் தீபாவளி நவம்பர் 05 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் தேவ் தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனெனில் இந்நாளில் சந்திரன் மேஷ ராசியிலும், சனி மீன ராசியில் வக்ரமாகவும், குரு தனது உச்ச ராசியான கடகத்தில் ஹன்ஸ் ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். அதோடு சுக்கிரன் துலாம் ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், செவ்வாய் விருச்சிகத்திலும் இருந்து ருச்சக ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.
மேலும் சூரியனும், சுக்கிரனும் துலாம் ராசியில் சுக்ராதித்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளனர். அத்துடன் சித்தி யோகம், அமிர்த சித்த யோகம், சர்வார்த்த சித்த யோகங்களும் உருவாகியுள்ளன. இப்படி தேவ் தீபாவளி நாளில் உருவாகியுள்ள பல சுப யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
தேவ் தீபாவளி நாளில் உருவாகியுள்ள பல யோகங்களால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கியமாக இன்று பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
கடகம்
தேவ் தீபாவளி நாளில் உருவாகியுள்ள பல யோகங்களால் கடக ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் ஆசியைப் பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. பணிபுரிபவர்களுகு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். நிதி நிலை வலுவடையும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்
தேவ் தீபாவளி நாளில் உருவாகியுள்ள பல யோகங்களால் விருச்சிக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பெற்றோர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











