December Month Rasi Palan 2025: ஆண்டின் கடைசி மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..

December Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் டிசம்பர் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் டிசம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என டிசம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2025 டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

December Month Rasi Palan 2025 December 2025 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் புதிய தொடக்கங்கள், வாய்ப்புக்கள் மற்றும் உற்சாகமான சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆனால் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் நிதி விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க போதுமான ஓய்வு மற்றும் சீரான உணவு பழக்கத்தை கொள்ள வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இம்மாதத்தில் உங்களின் திட்டங்கள் நிறைவேறும். நிதி நிலைமை மிதமானதாக இருக்கும். அவசரமாக முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! டிசம்பர் மாதமானது படைப்பாற்றல் நிறைந்த மாதமாக இருக்கும். புதிய யோசனைகள் மற்றும் திட்டங்கள் மனதில் எழும். இது உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையைத் திறக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். இருந்தாலும் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் திடீர் செலவுகள் பிரச்சனைகளை உண்டாக்கும். சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன அமைதிக்கு தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். முக்கியமாக உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். இருந்தாலும் செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் புரிதலையும், பொறுமையையும் பராமரிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் சிறு விஷயங்களாலும் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் உங்களுக்கு விரைவான முன்னேற்றத்தைத் தரும் மாதமாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் கடின உழைப்பும் திறமைகளும் பாராட்டப்படும். உங்களின் முழு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். நிதி விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமானம் சிறப்பாக இருக்கும். இருந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் மறக்கமுடியாத நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இருப்பினும் மன அழுத்தம் அல்லது அதிக வேலைப்பளு சோர்வை உண்டாக்கும். இந்நிலையில் போதுமான ஓய்வு அவசியம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் ஒழுக்கம் நிறைந்த மாதமாக இருக்கும். உங்களில் இலக்குகளில் கவனம் செலுத்தி முன்னேறுவீர்கள். புத்திசாலித்தனம் வேலையில் வெற்றியைத் தரும். நிதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவசரப்பட்டு கண்மூடித்தனமாக முதலீடுகளை செய்யாதீர்கள். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். வீட்டு சூழல் அமைதியாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். அதிக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் சமநிலையான மாதமாக இருக்கும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் தெளிவாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் அவற்றைப் பெற பொறுமை அதிகம் தேவைப்படும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய செலவுகளை செய்யும் முன் நன்கு யோசிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால் தவறான புரிதல்களை உடனே கவனித்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தியானத்தில் ஈடுபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் உங்களுக்கு நல்ல மாற்றங்களையும், புதிய வாய்ப்புக்களையும் கொண்டு வரும். வேலையில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். தனிப்பட்ட உறவுகள் வலுவடையும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். பண விஷயத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு பெரிய முதலீடுகளை செய்வதாக இருந்தாலும் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் ஒழுக்கம், பொறுப்பு விடாமுயற்சி நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் திட்டமிட்ட முறையில் முன்னேறுவீர்கள். கடினமான சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நிதி விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அதிக ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இம்மாதத்தில் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க ஒத்துழைப்பும், தொடர்பும் தேவை. சில சமயங்களில் உங்களின் தீவிரமான குணம் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் உங்களின் படைப்பாற்றலும், சமூக தொடர்புகளும் அதிகரிக்கும். புதுமையான சிந்தனை வேலையில் முன்னேற்றத்தைத் தரும். நிதி விஷயங்களில் எந்த ஒரு ரிஸ்க்குகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறவுகளில் வெளிப்படையாக பேசுங்கள். ஆரோக்கியம் மற்றும் மன அமைதிக்கு முறையான வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். இது தவிர தியானம், யோகா போன்றவற்றிலும் ஈடுபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் உங்களின் படைப்புத் திறன் மற்றும் கற்பனைத் திறனால் வேலையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஆனால் நிதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள். காதல் உறவுகளில் புரிதல் மிகவும் அவசியம். அதிக உணர்ச்சிவசப்படுவதால் மிகவும் சென்சிடிவ்வானவராக மாறக்கூடும். தியானம், யோகா, போதுமான தூக்கம் போன்றவற்றை மேற்கொண்டால், இம்மாதத்தில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion