Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
December Month Rasi Palan 2024: டிசம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
December Month Rasi Palan 2024: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் டிசம்பர் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.
உங்களுக்கு 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் டிசம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என டிசம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2024 டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம. காதல் மற்றும் திருமண வாழ்க்கை சற்று மோசமாகவே இருக்கும். நிதி ரீதியாகவும் சாதகமாக இருக்காது. வருமானத்தில் குறைவு ஏற்படலாம். நிறைய செலவுகளால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பானதாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. காதல் மற்றும் திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். நிதி ரீதியாக, ஓரளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் மற்றும் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமாக இருக்காது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள் மற்றும் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக, வருமானம் சற்று குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகள் மற்றும் தொண்டை தொற்றுகள் தொந்தரவு செய்யலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்காது. வீட்டு சூழல் மோசமாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக நல்ல பணத்தை சம்பாதிக்க முடியும் மற்றும் பணத்தை சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! டிசம்பர் மாதமானது தொழில் ரீதியாக நிறைய வேலைப் பளுவையும், சில தடைகளையும் சந்திக்க நேரிடும். மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. குடும்பத்தில் ஒற்றுமை குறையும். திருமணமானவர்களின் வாழ்க்கை சற்று மோசமாகவே இருக்கும். நிதி ரீதியாக, இம்மாதத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பணியிடத்தில் நற்பலனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், ஏமாற்றமடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்களில் வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். வேலையில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் திருப்தி இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வருமானம் சிறப்பாக இருக்கும். நிறைற பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக வேலையில் அழுத்தம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம். பணத்தை சேமிக்க முடியாமல் போவதால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். ஆரோக்கியம் சாதகமாக இருக்காது. நீங்கள் தொண்டை தொற்று மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக சுமாரான பலன்களையே பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே அன்பை அதிகரிக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதத்தில் பெரிய உடல்நலப் பிரச்சினை எதுவும் இருக்காது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்திர் தொழில் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பான வெளியூர் பயணங்களால் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மிகவும் சிறப்பாக இருக்காது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஈர்ப்பு குறையும். சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியாமல், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை தொற்று மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் தொழில் ரீதியாக சுமாராக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கான பலன் கிடைக்காது. இதனால் மிகுந்த மன வருத்தமடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான தருணங்களை செலவிட முடியும் மற்றும் உறவு வலுவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிறைய சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் தொழில் ரீதியாக சுமாராகவே இருக்கும். வேலைப்பளு மற்றும் சவால்களை அதிகம் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வர கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஒவ்வொரு விஷயத்திலும் சச்சரவுகள் ஏற்படலாம் மற்றும் உறவில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். நிதி ரீதியாக, பணப்புழக்கம் சீராக இருக்காது. நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை தொற்று, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் தொழில் வாழ்க்கையில் சில சவால்களை சந்திப்பீர்கள். இந்நிலையில் பொறுமையுடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே ஈர்ப்பு குறையும். நீங்கள் இருவரும் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். நிதி ரீதியாக சாதகமாக இருக்காது. நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டையில் தொற்று, கால் வலி மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











