Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
2024 ஆம் ஆண்டின் கடைசி மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
December 2024 Lucky Zodiac Signs In Tamil: 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழையவுள்ளோம். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் காரணமாக மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் சில முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் இந்த மாதத்தில் இரண்டு முறை சுக்கிர பெயர்ச்சி ஏற்படவுள்ளது. மேலும் செவ்வாய் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதோடு புதன் உதயமாகவுள்ளார் மற்றும் சூரியன் குரு பகவானின் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படியான கிரகங்களின் ராசி மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் எந்த ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த வேலை இந்த மாதத்தில் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால் அதிக செலவுகள் காரணமாக, கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வேலை தொடர்பாக நீண்ட தூர பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி ரீதியாக சற்று சுமாராகவே இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் நன்றாக இருக்கும். இந்த மாதத்தில் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். கடினமாக உழைப்பதோடு, அந்த கடின உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த மாதத்தில் பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும் மற்றும் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். எவ்வளவு தடைகளை வேலையில் சந்தித்தாலும், அதையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் இம்மாதம் அருமையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இம்மாதத்தில் சவால்களை சந்தித்தாலும், கடின உழைப்புக்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும். முக்கியமாக இந்த ஆண்டில் நடக்கும் என எதிர்பார்த்த விஷயம் டிசம்பர் மாதத்தில் வெற்றிகரமாக நடக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் வெற்றிகளைத் தரும் மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். லட்சுமி தேவியின் ஆசி முழுமையாக கிடைப்பதால், பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications