Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
உங்க ராசி என்னன்னு சொல்லுங்க... உங்களோட இருண்ட ரகசியங்களை சொல்றோம்...
Dark Side Of Zodiac Signs In Tamil: இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் மிகவும் வெளிப்படையாக இருப்பதில்லை. சொல்லப்போனால் வெளிப்படையாக இருப்பவர்களுக்கு பின் கூட ஒரு இருண்ட பக்கம் இருக்கும். எனவே இவ்வுலகில் எவரையும் முழுமையாக சரியாக கணித்துவிட முடியாது. சிலர் நம்மிடம் சகோதரர் போல, நெருங்கிய நண்பர் போல பழகுவார்கள். ஆனால் அவர்களைப் பற்றி முழுமையாக நமக்கு தெரியாது மற்றும் அவரைப் பற்றிய ரகசியங்களை மறைப்பார்.
ஆனால் ஜோதிடம் ஒருவரைப் பற்றிய இருண்ட பக்கத்தை வெளிப்படுத்தும் மற்றும் இது ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் உள்ளன. அதேப் போல் இருண்ட பக்கங்களும் உள்ளன. இருண்ட பக்கங்கள் என்பவை வேறொன்றும் இல்லை தீய அல்லது மோசமான குணங்கள் தான். இப்போது 12 ராசிக்காரர்களின் இருண்ட பக்கங்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் நியாயமாக விளையாடமாட்டார்கள். விரைவில் வெற்றி பெற அவர்கள் சாமர்த்தியமாக மற்றவர்களை ஏமாற்றலாம். மேலும் இவர்கள் தைரியமானவர்களாக காணப்பட்டாலும், உண்மையில் ஒருவித பாசத்தை எதிர்பார்ப்பார்கள். காதலுக்காக அதிகம் ஏங்குவார்கள். ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். இவர்களின் உணர்வுகளை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வதை விரும்பமாட்டார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் உள்ள மோசமான குணம் அவர்களின் பிடிவாதம் தான். என்ன தான் பொறுமைசாலியாகம், நிலையாகவும் இருந்தாலும், பிடிவாத குணம் இவர்களுக்கு பல பிரச்சனைகளை உருவாக்கும். இந்த பிடிவாத குணத்தால், இவர்களால் சரி, தவறுகளுக்கு இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாது. மேலும் இவர்கள் மாற்றத்தை விரும்பமாட்டார்கள். ஏனெனில் இவர்கள் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள அதிகம் சிரமப்படுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அதிகம் சொற்பொழிவாற்றுவார்கள். இது ஒரு நல்ல குணமாக இருந்தாலும், இதுவே சில சமயங்களில் அவர்களின் மோசமான குணமும் கூட. இவர்கள் யாரையேனும் காதலித்தால், அவர்களுடன் நீண்ட கால உறவில் இருக்கமாட்டார்கள். சிறு பிரச்சனைகளுக்கும் துணையையே அடிக்கடி குறை கூறுவர். இதுவே இவர்களின் குறுகிய கால உறவுகளுக்கு காரணம்.
கடகம்
கடக ராசிக்கார்கள் உண்மையில் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால் இவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளை மறைத்து, காயம் மற்றும் கையாளுதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு வலுவான படத்தை முன்வைத்து நடிப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பொறாமை மற்றும் பொசசிவ்வானவர்கள். இவர்கள் பின்விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் விரும்பியதை பெற நினைப்பார்கள். எல்லாவற்றிலும் மையமாக இருக்க விரும்புவார்கள். கவனத்தை ஈர்ப்பதில் அவர்கள் மகிழ்ந்தாலும், அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்த போராடுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அதிகமாக விமர்சிப்பார்கள். தங்கள் உண்மையான கருத்துக்களை மறைக்க, அடிக்கடி நேர்மையற்ற பாராட்டுக்களை வழங்குவார்கள். இப்படியான பழக்கம் அவர்களை இதயமற்றவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும் வெளிக்காட்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அமைதி மற்றும் சமநிலையை விரும்புவார்கள். ஆனால் சொந்த லாபத்திற்காக மற்றவர்களை பயன்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் கையாளுதல் திறன்களைப் பற்றி தற்பெருமை கொள்வார்கள். தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் தங்கள் அச்சங்களை மறைப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமான மற்றும் மர்மமானவர்கள். ஆனால் அவர்களின் பேரார்வம் மற்றும் பழிவாங்கும் எண்ணம் அவர்களை ஆபத்தானவர்களாக காட்டும். இவர்கள் தங்களுக்கு யாரேனும் தீங்கு செய்தால், அதை மனதில் வைத்துக் கொண்டு, சரியான நேரம் வரும் போது தவறாமல் பழிவாங்குவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் தைரியமானவர்கள். ஆனால் அவர்களின் அதிகப்படியான வெளிப்படையான தன்மை மற்றும் சாதுர்யமற்ற இயல்பு அவர்களை உணர்ச்சியற்றவர்களாக்கும். முக்கியமாக இவர்கள் சற்றும் சிந்திக்காமல் பேசுவார்கள். இது மற்றவர்களை விரைவில் புண்படுத்தும். மேலும் இவர்களின் முதிர்ச்சியற்ற தன்மை அவர்களை பொறுப்புக்களில் இருந்து ஓடச் செய்யும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் ஒழுக்கமானவர்கள். ஆனால் அதிக லட்சிய இயல்பு, இவர்களை கொடூரமாகவும், சுயநலமாகவும் காட்டும். இவர்கள் தங்கள் இலக்கை அடைய எந்த எல்லைக்கும் செல்வார்கள் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்களாகவும், புதுமையானவர்களாகவும் இருப்பர். ஆனால் அவர்களின் கலக குணம் அவர்களை நிலையற்றவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் காட்டும். இவர்கள் எந்த விதிகளையும் பின்பற்றமாட்டார்கள். தங்கள் சுதந்திரத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் எப்போது தன்மைப்படுத்தப்படுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ் மற்றும் கற்பனைத்திறன் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் குணம் சில சமயங்களில் உண்மையிலிருந்து விலக்கிவிடும். நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வார்கள்.
ஒவ்வொரு ராசிக்காரர்களிடமும் நல்ல குணங்களுடன், கெட்ட குணங்களும் உள்ளன. கெட்ட குணங்களை ஒருவர் புரிந்து கொண்டு அவற்றைக் கடக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருவராலும் தங்களின் குணங்களை சிறப்பாக மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே நமது கெட்ட குணங்களை நாம் வென்றால், சிறந்த மனிதர்களாக மாறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications