Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
சனி-சுக்கிர சேர்க்கை: தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது...
Conjunction of Saturn And Venus 2024: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது கர்ம செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமானாக கருதப்படுகிறார். அதேப் போல் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். சனியும், சுக்கிரனும் நட்பு கிரகங்களாகும். பொதுவாக இவ்விரு கிரகங்களின் சேர்க்கையானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அதுவும் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் சனியின் மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் நிகழும் போது, அது இன்னும் மங்களகரமானது. இப்படிப்பட்ட சேர்க்கை இந்த ஆண்டில் தீபாவளிக்கு பின் நிகழவுள்ளது. அதுவும் இந்த சேர்க்கை 30 ஆண்டுகளுக்கு பின் டிசம்பரில் நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதனால் அந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும் மற்றும் உங்களின் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். வசதிகள் அதிகரிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டில் குடிப்பெயர விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் செயல்திறன் மேம்படும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் பெருமளவில் அதிகரிக்கும். புதிய வருமானத்தைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைத் தருவதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications