Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஆண்டின் கடைசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு புத்தாண்டு சூப்பரா இருக்கும்..
Chaturgrahi Yog In Sagittarius On 29 December 2025: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி ராசியை மாற்றி சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம்.
இந்த ஆண்டின் இறுதியில் ஒரு அற்புதமான யோகம் உருவாகவுள்ளது. அது தான் சதுர்கிரக யோகம். இந்த யோகமானது நான்கு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகக்கூடியது. ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தற்போது சூரியனும், செவ்வாயும் குரு பகவானின் ராசியான தனுசு ராசியில் உள்ளார். இந்நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி சுக்கிரனும் தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் டிசம்பர் 29 ஆம் தேதி புதனும் தனுசு ராசிக்குள் நுழைவார். இதனால் ஆண்டின் இறுதியில் தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களைத் தரும். அதுவும் இந்த யோகம் ஆண்டின் இறுதியில் உருவாவதால், புத்தாண்டின் தொடக்கம் சிலருக்கு மிகவும் அற்புதமாகவும், செழிப்பாகவும் இருக்கப்போகிறது. இப்போது 2025 ஆண்டின் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதன் மூலம் நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. குடும்பத்தினருடன் புனித பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் திருமணமாகாதவர்களுகு நல்ல வரன் தேடி வரும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முக்கியமாக பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
