Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
50 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Chaturgrahi Yog 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் நிழல் கிரகமான கேதுவும் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

அதைத் தொடர்ந்து செப்ம்பர் 15 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதன் காரணமாக சிம்ம ராசியில் சூரியன், கேது, புதன், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த 4 கிரகங்களின் சேர்க்கையால் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளின் தாக்களிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் மற்றும் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்போது சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். சமூகத்தில் புகழும், நற்பெயரும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்களின் பணப்பிரச்சனைகள் தீரும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தலைமைப்பண்புகளும், படைப்பாற்றலும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தந்தையுடனான உறவு இக்காலத்தில் மேம்படும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தொழிலதிபர்களும், வணிகர்களும் நல்ல நிதி லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்ய நினைத்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். ஆன்மீகத்தில் மற்றும் தொண்டுகளில் நாட்டம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
