Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
2026-ல் தொழிலில் நல்ல வளர்ச்சியை காணப்போவது இந்த 5 ராசிக்காரங்க தான்.... உங்க ராசி இதுல இருக்கா?
Career Horoscope 2026: 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த புதிய ஆண்டில் கிரகங்களின் நிலைகளால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பலவிதமான எதிர்பாராத மாற்றங்களை காணலாம். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்படி வரவிருக்கும் புதிய ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆவல் இருக்கும்.
குறிப்பாக தொழில் ரீதியாக எவ்வாறு இருக்கும் என்பதை அறிய அனைவருக்குமே ஆசை இருக்கும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமாக இருப்பதோடு, நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு 2026 புத்தாண்டு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி ஏற்படப்போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
2026 புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். குரு பகவானின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் உச்சத்தை அடைய விரும்பினால், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயலுங்கள். உங்களுக்கு பிடித்ததை, மனதிற்கு தோன்றுவதை யோசிக்காமல் செய்யுங்கள். இதனால் நல்ல பலனைப் பெறுவீர்கள். உங்கள் திறமையை எவ்வளவு வெளிப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு வாய்ப்புக்கள் உங்களை தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். கிரகங்கள் சாதகமான நிலைகளில் இருப்பதால், வருமானத்தில் உயர்வையும், பதவி உயர்வையும் பெறக்கூடும். பணியிடத்தில் உங்களின் அர்ப்பணிப்பு உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படும். இதன் மூலம் அலுவலகத்தில் பெரிய அளவிலான புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். நண்பர்களால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக பிரகாசிப்பீர்கள். செவ்வாய் மற்றும் குரு பகவான் உங்களை ஊக்குவிப்பதால் மிகப்பெரிய திட்டங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு தலைமைப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் வெற்றி அனைவராலும் பேசப்படும். தொழிலில் தைரியமான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் மற்றும் சிறந்த படைப்பாற்றல் மிக்கவராக திகழ்வீர்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். மொத்தத்தில் தொழில் ரீதியாக இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு முக்கியமான புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். எதையும் முன்கூட்டியே நன்கு சிந்தித்து செய்வீர்கள். அது தான் உங்களின் வல்லமை. இந்த ஆண்டில் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து, எந்த வேலையையும் செய்யுங்கள். இதனால் வெற்றி நிச்சயம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் நீண்ட நாள் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையில் உங்களின் வழக்கங்களை தவறாமல் பின்பற்றி வந்தால், சிறப்பான பலனைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன், பல புதிய பொறுப்புக்களும் வழங்கப்படலாம். உங்களின் திறமைகளை யோசிக்காமல் வெளிப்படுத்துங்கள். இதனால் எதிர்பாராத பலனைப் பெறுவீர்கள். இந்த ஆண்டில் வலுவான தொடர்புகளை உருவாக்குங்கள். சிறந்த வழிகாட்டிகளை கண்டுபிடியுங்கள் மற்றும் நீங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராக இருப்பதை அனைவருக்கும் வெளிக்காட்டுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
