Cancer Horoscope 2025: நீங்க கடக ராசியா? அப்ப வருகிற 2025 உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு பாருங்க...

Cancer Horoscope 2025 In Tamil: 2025 ஆம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவ கிரகங்களின் பயணத்தாலும் கடக ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், கடக ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் பல அற்புத மாற்றங்கள் ஏற்படப்போகிறது. கடந்த 5ஆண்டு காலமாக கண்டச்சனியாக, அஷ்டம சனியாக பாடாக படுத்திய சனிபகவான் உங்களை விட்டு விலகப்போகிறார். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படப்போகிறது. புத்தாண்டில் நவகிரகங்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பண மழை பொழியப்போகிறது.

Cancer Horoscope 2025 Kadaka Rasi Palan Cancer Yearly Horoscope Predictions In Tamil

கிரகப்பெயர்ச்சிகள்

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் எட்டாம் வீட்டில் இருந்து 9 ஆம் வீடான பாக்ய வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் மே மாதம் வரை லாப ஸ்தானத்திலும் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை விரைய ஸ்தானத்திலும் அக்டோபர் மதத்தில் அதிசாரமாக ஜென்ம ராசியிலும் பயணம் செய்யப்போகிறார். ராகு உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். கேது உங்கள் ராசிக்கு 3 ஆம் வீட்டில் பயணம் செய்கின்றனர் மே மாதத்திற்குப் பிறகு ராகு எட்டாம் வீட்டிற்கும் கேது இரண்டாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர்.

குடும்ப வாழ்க்கை

9 ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் சனிபகவான் நன்மைகளை தரப்போகிறார். உங்களை விட்டு விலகிப்போனவர்கள் வீடு தேடி வருவார்கள். பட்ட அவமானங்கள் எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 7, 9ஆம் இடங்களின் மீது விழுவதால் திருமணம், சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குரு பலன் கிடைக்கப்போவதால் திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும்.

வேலை மற்றும் தொழில்

வேலையை இழந்து வருமானம் இன்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தர்ம சனி காலத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். செய்யும் வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு பகவான் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொட்டதெல்லாம் பொன்னாகும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மே மாதத்தின் மத்தியில் குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு வந்து அமரப்போகிறார். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். குரு பகவான் அக்டோபர் மாதத்தில் அதிசாரமாக உங்கள் ராசிக்குள் வந்து அமர்ந்து ஜென்ம குருவாக பயணம் செய்யும் காலத்தில் பண வருமானம் அதிகரிக்கும்.

பொருளாதார நிலை

ராகு பகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் 3 ஆம் வீடான தைரிய ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். புதிய சொத்து வாங்க முயற்சிப்போருக்கு கால நேரம் கூடிவரும்.

மே மாதத்திற்குப் பிறகு ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலும் பயணம் செய்யப்போகின்றனர். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லது.

பெண்கள்

ராகு கேதுவின் இடப்பெயர்ச்சியால் உங்களுடைய வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம். பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குடும்ப பிரச்சினைகளை யாருக்கும் சொல்ல வேண்டாம்.

மாணவர்கள்

படிப்பு விசயத்தில் கவனம் தேவை. மார்ச் மாதம் வரை அஷ்டம சனி நீடிப்பதால் பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம். உயர்கல்வியை தேர்வு செய்யும் மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களை கலந்து ஆலோசனை செய்வது நல்லது. கடக ராசிகளில் பிறந்தவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, December 28, 2024, 20:45 [IST]
Desktop Bottom Promotion