Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
12 மாதங்கள் கழித்து உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Budhaditya Rajyog In Virgo On September 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
அதே சமயம் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தன்னம்பிக்கை, மரியாதை, கௌரவம், அரசியல், அரசு வேலை, தந்தை ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். இந்த சூரியன் செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்கு செல்வார்.

அதே வேளையில் புதனும் அதன் உச்ச ராசியான கன்னி ராசியில் நுழைந்து பயணிப்பார். இதனால் கன்னி ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் வருமானத்தில் நல்ல உயர்வையும், பதவி உயர்வையும் பெற வாய்ப்புக்கள் உள்ளன. அதோடு இந்த ராஜயோகத்தினால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது கன்னி ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் புதன், சூரிய சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. பரம்பரை சொத்துக்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இதுவரை உங்கள் வேலையில் எந்த ஒரு முன்னற்றத்தையும் காணாமல் இருந்தால், இம்மாதத்தில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். முக்கியமாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் புதன், சூரிய சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கினால் நல்ல லாபத்தைப் பெறலாம். படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். ஒரு புதிய விஷயத்தை தொடங்க இக்காலம் சிறந்ததாக இருக்கும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் புதன், சூரிய சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்களின் மனதில் இருந்த பயம் நீங்கி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் நிலை உயரும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications