Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
1 வருடம் கழித்து தீபாவளிக்கு முன் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கபோகுது
Budhaditya Rajyog In Libra On October 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களால் பல்வேறு சுப மற்றும் ராஜயோகங்கள் அவ்வப்போது உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராஜயோகங்களுள் புதாதித்ய ராஜயோகம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த ராஜயோகம் ஒருவரது ஜாதத்தில் இருந்தால், அந்நபர் அனைத்துவிதமான பொருள் இன்பங்களையும் பெறுவார். இந்த ராஜயோகமானது கிரகங்களின் தலைவனான சூரியன் மற்றும் கிரகங்களின் இளவரசனான புதனின் சேர்க்கையால் உருவாகும். இப்படிப்பட்ட யோகமானது அக்டோபர் மாதத்தில் 17 ஆம் தேதி உருவாகவுள்ளது.

அதுவும் சுக்கிரனின் துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் இந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கம் தெரியும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, பண மழையில் நனையப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வேலையைத் தொடங்கும் திட்டம் இருந்து, இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டதானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முக்கியமான திட்டங்கள் பல வெற்றிகரமாக நடந்து முடிவடையும். தந்தையுடனான உறவு வலுவடையும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பண மழை பொழியும். பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications