Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
பாபா வாங்கா கணிப்புப்படி 2025-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப் போகுதாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Baba Vanga Predictions 2025: உலகில் எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கத்தரசிகளுள் மிகவும் பிரபலமான ஒருவர் தான் பாபா வாங்கா. இந்த பாபா வாங்கா பல்கேரியாவைச் சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே விபத்து ஒன்றின் மூலம் பார்வை இழந்தவர். இந்த விபத்துக்கு பிறகு இவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் கிடைத்தது. இதுவரை இவரது பல கணிப்புகள் சரியாக நிகழ்ந்துள்ளன.
அதில் 1997-ல் இளவரசி டயானாவின் மரணம், 2001-ல் நியூயார்க் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல், ரஷ்யா-உக்ரைன் போர் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர பாபா வாங்கா இன்னும் ஏராளமான சம்பவங்களை கணித்து, அதுவும் நடந்துள்ளன. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாபா வாங்காவின் எதிர்கால கணிப்புகளை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டுள்ளனர். இவரது கணிப்புகளுள் சில மோசமானவையாக இருந்தாலும், சில நல்ல சம்பவங்களும் நடந்துள்ளன.

பாபா வாங்கா எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களை மட்டும் கணிக்கவில்லை. எந்த ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக, வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை காணும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் வாழ்வில் பல மாற்றங்களை காண்பார்கள். எவ்வளவு அதிகமாக மாறுகிறதோ, அவ்வளவு கவனிக்கக்கூடியதாக இருக்கும். இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று எல்லாம் நல்லதுக்கு என்பது தான். இந்த ஆண்டில் வாழ்வில் நம்ப முடியாத எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கண்டாலும், அதை கண்டு அஞ்சாமல், அதை நம்பிக்கையுடன் ஏற்று வாழ வேண்டும். மேலும் இந்த ஆண்டானது உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்குமாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் எவ்வளவு படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்களோ, அவ்வளவு வெற்றியைப் பெறுவார்கள். மற்றவர்கள் வழக்கமாக பின்பற்றும் பாதையை தேர்ந்தெடுத்து செல்லாமல், உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடந்தால், நிச்சயம் வெற்றி பெறலாம். இந்த ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரகமாக நடக்கும். மொத்தத்தில் மிதுன ராசிக்காரர்கள் இணக்கமாக இருக்க முயற்சித்தால், சிறப்பான ஆண்டாக இருக்குமாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்த ஆண்டில் இவர்கள் ஒவ்வொரு துறையிலும் செழிப்பைக் காண்பார்கள். நீண்ட கால கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். இதுவரை குறைவான வருமானத்தைக் கொண்டிருந்தால், 2025 ஆம் ஆண்டில் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பீர்கள். முதலீடுகளை செய்வதாக இருந்தால், புத்திசாலித்தனமாக யோசித்து முதலீடு செய்தால், எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறலாம். மொத்தத்தில் இந்த ஆண்டு நிதி ரீதியாக சிறப்பான ஆண்டாக இருக்குமாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


