August Month Rasi Palan 2025: ஆகஸ்ட் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...

August Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஆகஸ்ட் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2025 ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

August Month Rasi Palan 2025 August 2025 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் உணவில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். இருந்தாலும், இந்த மாதம் பேச்சில் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது சுயபரிசோதனைக்கான மாதமாக இருக்கும். மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பொறுமையைக் கடைப்பிடித்தால், நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். உறவுகளில் வெளிப்படைத்தன்மையைப் பேண வேண்டும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது உற்சாகமாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஒவ்வொரு வேலையையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல லாபத்தைத் தருவதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இருந்தாலும், பிரச்சனைகள் வந்தால், அதைப் புறக்கணிக்க வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். வேலையில் பதற்றம் அதிகரிக்கும். இருப்பினும் உங்களின் புத்திசாலித்தனத்தால் நிலைமை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெற புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அந்த திட்டமும் எதிர்பார்த்த பலனைத் தரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இருந்தாலும் தேவையற்ற செலவுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மாதத்தில் கலைத்திறன் மற்றும் புத்திசாலித்தனம் பாராட்டப்படும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சமுகத்தில் கௌரவம் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு லாம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் தவறான புரிதல்களால் பிரச்சனைகளை சந்திக்கலாம். பேச்சுத்திறன் மேம்படும். பேச்சால் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பழைய பிரச்சனைகள் இப்போது வாழ்வில் பல தடைகளை ஏற்படுத்தலாம். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். இது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். உங்களின் கற்பனைத்திறன் அதிகரிக்கும். வேலையில் படைப்பாற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் நிறைய லாபத்தைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் திட்டங்களில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். முதலீட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் பதற்றம் அதிகரிக்கும். இருப்பினும் பொறுமையுடன் இருந்தால், இம்மாதத்தில் பிரச்சனைகளை அதிகரிக்கவிடாமல் தடுக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதம் சுய வளர்ச்சிக்கான மாதமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதியை தேடி செல்வீர்கள். வேலையில் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். நிதி நிலை சீராக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதமானது சாதகமாக இருக்கும். கற்பனை திறனால் புதிய உயரங்களை அடைவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். வேலையில் தடைகளை சந்திப்பீர்கள். இருந்தாலும் பொறுமையுடன், கடினமாக உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம். இம்மாதத்தில் பயணங்களை மேற்கொள்ளும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, July 26, 2025, 17:09 [IST]
Desktop Bottom Promotion