Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Sun Enter Mrigasheersham Nakshatra On June 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
தற்போது சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் ஜூன் மாதத்தில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் ஜூன் 08 ஆம் தேதி சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். அதன் பின் ஜூன் 15 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைவார்.

ஜோதிடத்தில் சூரியன் தலைமைத்துவம், சுயமரியாதை, சக்தி, உயர் பதவி ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் சிம்ம ராசியின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலர் தங்கள் வாழ்க்கையில் மரியாதையையும் வெற்றியையும் பெறுவார்கள்.
அதுவும் சூரியன் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு செல்வதால் சில ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நடந்து வரும் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பலவிதமான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வணிகர்களின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைத் தரும்.
துலாம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பரம்பரை தொழிலில் இருப்பவர்கள், பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உறவுகளில் பிணைப்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
தனுசு
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் வியாபாரிகளுக்கு செல்வாக்கு மிக்கவர்களுடன் நட்பு கிடைக்கும். இதன் மூலம் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications