Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
சக்திவாய்ந்த அர்த்தகேந்திர யோகம்: செப்டம்பர் 25-ல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Ardhakendra Yog On 25 September 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இப்படி ஒரு ராசியில் குரு பகவான் நீண்ட காலம் பயணிப்பதால், குருவின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக தெரியும். தற்போது குரு பகவான் புதனின் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த ராசியில் குரு இருக்கும் வேளையில் அவ்வப்போது பல்வேறு கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளாலோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் நவராத்திரியில் குரு பகவான் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனுடன் சேர்த்து ஒரு யோகத்தை உருவாக்கவுள்ளார். அது தான் அர்த்தகேந்திர யோகம்.

இந்த யோகமானது செப்டம்பர் 25 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் போது குருவும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் போது சுக்கிரன் சிம்ம ராசியில் இருப்பார். இந்த யோகத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் காணப்படும்.
அதில் 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சிறப்பான பலன்களைத் தரப்போகிறது. இப்போது குரு சுக்கிரனால் உருவாகும் அர்த்தகேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அர்த்தகேந்திர யோகத்தால் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். குருவின் ஆசியால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் குரு சுக்கிரனால் உருவாகும் அர்த்தகேந்திர யோகத்தால் எடுக்கும் வேலைகளில் வெற்றிகளைக் குவிப்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இக்காலத்தில் துணிந்து ரிஸ்க்குகளை எடுப்பீர்கள். அப்படி எடுக்கும் ரிஸ்க்குகளுக்கு ஏற்ற நல்ல பலனும் கிடைக்கும். எதிரிகளை திறம்பட சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் அர்த்தகேந்திர யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கையும், முடிவெடுக்கும் திறனும் மேம்படும். முக்கியமான வேலைகளை எளிதில் முடிப்பீகைள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications