Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
வர ஐப்பசி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாவும் இருக்கும்-ன்னு பாருங்க..
Aippasi Matha Rasipalan 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். துலாம் ராசிக்கு சூரியன் செல்வதால் தமிழ் மாதங்களில் 7 ஆவது மாதமான ஐப்பசி மாதம் பிறக்கப்போகிறது.
இந்த சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள ஐப்பசி மாதத்தில் சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களின் நிலைகளாலும், மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் காணக்கூடும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது ஐப்பசி மாதமானது 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை தலையிட விடாதீர்கள். மேலும் நீங்களும் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறக்கூடும். உங்களின் உறவினர்கள் கண்டதை பேசி புண்படுத்துவார்கள். அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது. தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். வேற்று மொழி மனிதர்களால் நல்ல பலன்களைப் பெறக்கூடும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் ஐப்பசி மாதத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் பாடாய் படுத்தும். தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். எதிர்பார்த்த அனுகூலங்கள் ஏற்றத்தை ஏற்படுத்தித் தரும். வியாபாரத்தில் பண வரவில் இருந்த பிரச்சனைகள் முழுமையாக நீங்கும். பழைய கடன்களை தீர்க்க மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தம்பதிகளிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி, அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். சொத்துக்கள் குவியும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த பிரச்சனைகள் தீரும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல ஏற்றத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் நல்ல அனுகூலங்கள் கிடைக்கும். கடன்களை பைசல் செய்யும் உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறக்கூடும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷங்கள் இம்மாதத்தில் நடக்கும் வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் தொழில் மாற்றங்கள், இடமாற்றங்கள், படிப்பு மாற்றங்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். மரண பயம் நீங்கும். திருமண தடைகள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படலாம். பழக்கவழக்கத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக ஏற்றங்கள் ஏற்படும். தாய்வழி மற்றும் தந்தை வழி உறவுகள் மேன்மையடையும். தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசினால் நல்ல அனுகூலத்தைத் தரும். இந்த ராசிக்காரர்கள் இம்மாதத்தில் பிள்ளையாரை வணங்கினால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழிலில் நல்ல அனுகூலம் காணப்படும். ஆனால் சூரியனின் நிலையால் பேச்சால் பல மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே சமயம் அதே பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண், காது, மூக்கு, தொண்டை, பற்கள் போன்றவற்றில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். நரம்பு, கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. சுப காரியங்களில் தடைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளை அதிகம் நச்சரிக்காதீர்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகளை சரிசெய்ய முயற்சிப்பது நல்லது. பண வரவு சிறப்பாக இருக்கும். தாய்வழி, தந்தைவழி உறவு மேன்மையடையும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! ஐப்பசி மாதம் அற்புதமாக இருக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகளும் அகலும். திருமண தடை, உத்தியோக தடை, வியாபார தடை நீங்கும். ஆனால் பெற்றோர் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். இம்மாதம் லாபமும், சந்தோஷமும் நிறைந்ததாக இருக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் படிப்படியாக நடக்கும். மேலும் இம்மாதத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கியமாக இம்மாதத்தில் புதிய தொழிலை தொடங்கினால், நல்ல பலனைப் பெறக்கூடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் பிபி, சுகர், தைராய்டு போன்றவற்றில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் பதட்டமில்லாமல் இருந்தால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். லாபமும், சந்தோஷமும் நிறைந்திருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுப செலவுகளை சந்திக்க நேரிடும். கொடுத்த வாக்கை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் பதட்டமடைவதைத் தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். இதுவரை சந்தித்த தடைகளை அனைத்தும் விலகும். புதிய முயற்சிகளில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள்! ஐப்பசி மாதத்தில் பரம்பரை நோய்கள் சிரமப்படுத்தும். தேவையில்லாத விஷயங்களால் மன கஷ்டம் அதிகரிக்கலாம். மூன்றாம் நபரால் தேவையில்லாத மனக்கசப்பை சந்திக்க நேரிடும். என்ன தான் இந்த ராசிக்காரர்கள் புத்திசாலியாக இருந்தாலும், குருவின் நிலையால் பேச்சில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மரை இம்மாதத்தில் வணங்கினால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! ஐப்பசி மாதத்தில் பெற்றோருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சுப காரியத்தில் இருந்த தடைகள் நீங்கும். லாபமும், சந்தோஷமும், அனுகூலமும் நிச்சயம் ஏற்படும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல அனுகூலத்தைப் பெறக்கூடும். வியாபாரத்தில் இருந்து பிரச்சனைகள் தீரும். நரம்பு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











